முகப்பு » புகைப்பட செய்தி » முஸ்லீம் விவகாரம் முதல் காந்தி வரை.. கமல்ஹாசன் நடித்து சர்ச்சையில் சிக்கிய 5 படங்கள்... மூவி லிஸ்ட் இதோ!

முஸ்லீம் விவகாரம் முதல் காந்தி வரை.. கமல்ஹாசன் நடித்து சர்ச்சையில் சிக்கிய 5 படங்கள்... மூவி லிஸ்ட் இதோ!

நடிகர் கமல் ஹாசனின் நடிப்பில் வெளியாகி இதுவரை சர்ச்சையில் சிக்கிய ஐந்து படங்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்கலாம்.

  • 15

    முஸ்லீம் விவகாரம் முதல் காந்தி வரை.. கமல்ஹாசன் நடித்து சர்ச்சையில் சிக்கிய 5 படங்கள்... மூவி லிஸ்ட் இதோ!

    கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் பல சர்ச்சைகளில் சிக்கியது. வகுப்புவாத வன்முறைக்கு பயந்து தமிழ் நாட்டில் படம் தடை செய்யப்பட்டது. இத்திரைப்படத்தில் அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என்பதை உணர்த்துவதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாட்டியது. பின்னர் உயர்நீதிமன்றத்தால் தடை நீக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்து மக்கள் கட்சி படத்தின் பெயர் தமிழ் வார்த்தையாக இல்லை என்று கூச்சலிட்டது, மேலும் கமல்ஹாசனின் தாய்மொழிக்கு எதிரானது என்று குற்றம் சாட்டியது. படத்தை சாட்லைட்டில் திரையிடும் கமல் ஹாசனின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை முதலில் திரையரங்கிலும், ஒரு வாரம் கழித்து டிடிஎச் சேவைகளிலும் வெளியிடப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 25

    முஸ்லீம் விவகாரம் முதல் காந்தி வரை.. கமல்ஹாசன் நடித்து சர்ச்சையில் சிக்கிய 5 படங்கள்... மூவி லிஸ்ட் இதோ!

    தசவதாரம் என்ற இந்த பிரம்மாண்டமான படத்தில் கமல் ஹாசன் 10 விதமான கதாபாத்திரங்களில் நடிதிருந்தார். சைவத்துக்கும் வைணவத்துக்கும் இடையிலான மோதல் எப்படி படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று விஎச்பி எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கிடையில், தமிழ் திரையுலகைச் சேர்ந்த உதவி இயக்குனர் செந்தில் குமார், படத்தின் கதைக்களம் தனது ஸ்கிரிப்டில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டினார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்று படத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 35

    முஸ்லீம் விவகாரம் முதல் காந்தி வரை.. கமல்ஹாசன் நடித்து சர்ச்சையில் சிக்கிய 5 படங்கள்... மூவி லிஸ்ட் இதோ!

    ஹிந்தியில் அமீர் கான் நடிப்பில் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் என்ற தலைப்பில் வெளியான வெற்றிப் படத்தின் தமிழ் ரீமேக் தான் வசூல் ராஜா எம்பிபிஎஸ். ஈரோட்டில் உள்ள இந்திய மருத்துவ சங்கத்தினர் படத்தின் தலைப்பு மருத்துவர்களை இழிவுபடுத்துவதாக கூறி குற்றம் சாட்டினர். பின்னர் இந்தப் படம் மருத்துவர்களை விமர்சிக்கவில்லை என்று படத்தின் தயாரிப்பாளர்கள் உறுதியளித்தனர்.

    MORE
    GALLERIES

  • 45

    முஸ்லீம் விவகாரம் முதல் காந்தி வரை.. கமல்ஹாசன் நடித்து சர்ச்சையில் சிக்கிய 5 படங்கள்... மூவி லிஸ்ட் இதோ!

    விமர்சகர்களால் அதிகம் பாராட்டப்பட்டும், இது ஒரு கல்ட் சினிமா என்றும் போற்றப்பட்ட தேவர் மகன் படம் குறிப்பிட்ட சாதி குழுக்களுடையது என்றும் பலரால் விமர்சிக்கப்பட்டது. மேலும் தேவர் சமூகத்தினருக்குள்ளேயே இப்படம் போற்றப்பட்டதாக பல விமர்சனங்கலும் தற்போதுவரை உள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    முஸ்லீம் விவகாரம் முதல் காந்தி வரை.. கமல்ஹாசன் நடித்து சர்ச்சையில் சிக்கிய 5 படங்கள்... மூவி லிஸ்ட் இதோ!

    ஹே ராம் என்ற படம் வெளிநாட்டு மொழியில் சிறந்த படம் என்ற பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக இருந்தது. இந்தப் படத்தில் மகாத்மா காந்தியை எதிர்மறையாக சித்தரித்ததாகக் கூறி படம் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடதக்கது.

    MORE
    GALLERIES