நேற்று பண்டிகையை நடிகர் பாபி சிம்ஹா தனது குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
2/ 5
நடிகர் பாபி சிம்ஹா 2014 ஆம் ஆண்டு வெளியான ‘ ஜிகர்தண்டா’ படத்தின் மூலம் பிரபலமானார். அதைத் தொடர்ந்து உருமீன், பெங்களூரு நாட்கள் , கோ 2 ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார் பாபி சிம்ஹா.
3/ 5
உருமீன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ரேஷ்மி மேனனை 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
4/ 5
நடிகை ரேஷ்மி மேனன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் பற்றியும், ஸ்கின் டிப்ஸ் போன்றவற்றையும் இன்ஸ்டாவில் பதிவிடுவார்.
5/ 5
இந்நிலையில் நடிகை ரேஷ்மி நேற்று தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அனைவருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்திருந்தார்.