இயக்குநர் ஜீவாவின் உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசின். அந்தப் படம் தாமதமாக நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அவர் நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படம் முதலில் வெளியானது. பின்னர் அவர் நடித்த கஜினி படம் மிகப்பெரிய வெற்றிபெற்று அவரை தமிழின் முன்னணி நாயகியாக உயர்த்தியது. தொடர்ந்து விஜய்யுடன் சிவகாசி, போக்கிரி, காவலன், அஜித்துடன் ஆழ்வார், வரலாறு, சூர்யாவுடன் வேல், கமலுடன் தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கஜினி படம் ஹிந்தியில் ஆமிர் கான் நடிப்பில் ரீமேக் செய்யப்பட அதிலும் நாயகியாக அசின் நடித்தார். ஹிந்தியில் அந்தப் படம் வசூல் சாதனை படைத்து சல்மான் கான், அக்ஷய் குமார் என ஹிந்தியிலும் முன்னணி நட்சத்திரங்களின் பட வாய்ப்புகள் குவிந்தது. மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு அசின் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரின் என்ற மகள் இருக்கிறார். இந்த நிலையில் அசின் மகளின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.