நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கிற துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. துணிவு படத்துடன் நடிகர் விஜய்யின் வாரிசு படமும் வெளியாவதால் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு இல்லாத அளவுக்கு படத்தை தீவிரமாக புரமோட் செய்துவருகிறார்கள் படக்குழுவினர். அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு துபாயில் ஸ்கை டைவிங் முறையில் வானத்தில் துணிவு போஸ்டர் பறக்கவிடப்பட்டது.