ஏவி மெய்யப்ப செட்டியாரின் விருப்பத்தைக் கேட்டதும் ஏவிஎம் பேனரில் நடிக்க உடனே ரஜினி சம்மதித்தார். இனி ரஜனியும் நானும் இணைந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருப்பதால், ரஜினியை வைத்து தனியாக படம் தயாரிக்கட்டும். நானும் தனியாக கால்ஷீட் தருகிறேன் என்றார் கமல். இந்த நேரத்தில் மெய்யப்ப செட்டியார் மரணமடைய, திட்டம் தள்ளிப் போனது.
3. பாயும் புலி (1983 - எஸ்.பி.முத்துராமன்): போக்கிரி ராஜா வெளியானதற்கு அடுத்த வருடம் அதே எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினியை வைத்து பாயும் புலி படத்தை ஏவிஎம் தயாரித்தது. தி தர்ட்டி சிக்ஸ்த் சேம்பர் ஆஃப் ஷாவோலின் படத்தின் இன்ஸ்பிரேஷனில் இதன் கதை, திரைக்கதையை பஞ்சு அருணாச்சலம் எழுதினார். படம் 100 நாள்களைக் கடந்து ஓடியது.
9. சிவாஜி - தி பாஸ் (2007 - ஷங்கர்): நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் ரஜினியை வைத்து சிவாஜி படத்தை ஏவிஎம் தயாரித்தது. படம் 175 நாள்களை கடந்து ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது. ஒரு தயாரிப்பு நிறுவனத்தில், ஒரு நடிகர் நடித்த அனைத்துப் படங்களும் 100 நாள்களை கடந்து ஓடியது அரிய சாதனை. ஏவிஎம் - ரஜினி காம்போ இணைந்த 9 படங்களும் 100 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தன. அதனை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.