நடிகை ஆத்மிகாவின் சமீபத்திய சமூக வலைதள போஸ்ட் மறைமுகமாக அதிதி ஷங்கரை தாக்குவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. இந்தப் படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்திருந்தார். இதையடுத்து கோடியில் ஒருவன், காட்டேரி, கண்ணை நம்பாதே போன்ற படங்களில் நடித்தார். கோவையைச் சேர்ந்த ஆத்மிகாவுக்கு அவர் எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் இன்னும் அமையவில்லை. இந்நிலையில் தற்போது, ’பாக்கியசாலிகள் எளிதாக ஏணி மீது ஏறி விடுகிறார்கள். மீதமுள்ளவர்கள்? பாத்துக்கலாம்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஆத்மிகா. ஆத்மிகாவின் அந்த போஸ்ட் அதிதி சங்கரை மறைமுகமாக தாக்குவது போல் தெரிவதாக பதிவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள். இயக்குநர் சங்கரின் மகளான அதிதி, விருமன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கிறார். புகழ்பெற்றவர்களின் வாரிசுகளுக்கு எளிதில் திறக்கும் கதவுகள் எளியவர்களுக்கு திறப்பதில்லை என்பது பல்லாண்டுகளாக திரையுலகில் இருக்கும் குற்றச்சாட்டு. பாலிவுட்டில் இந்த நெப்போடிசம் கொடி கட்டி பறப்பது குறிப்பிடத்தக்கது.