பொறாமை கொண்டவர்களை அருகில் வைத்துக் கொள்ளாதீர்கள் என நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ஜெயம் ரவி இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமானவர் ரவி. அதன் பின்னர் ஜெயம் ரவி என அழைக்கப்படுகிறார். ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி. பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரு மகன்கள் இருக்கிறார்கள். இதில் ஆரவ், டிக் டிக் டிக் என்ற படத்தில் ரவியின் மகனாகவே நடித்திருந்தார். இன்ஸ்டகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி ரவி, சமீபத்தில் ஸ்டோரியில் பகிர்ந்திருந்த விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொறாமை கொண்டவர்களை நாம் அருகில் வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. அவர்கள் நம்மை ஒரு போட்டியாக பார்ப்பார்கள் ஆனால் நாமோ அவர்களை நண்பர்கள் குடும்பத்தினர் என பார்த்துவிடுவோம். இறுதியில் இந்த பிரபஞ்சம் அவர்களை களையெடுக்கும், எதிர்த்து போராட வேண்டாம், என்ற பதிவு தான் அது.