முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » கல்யாண வீடியோவால் செலக்ட் ஆன நாயகி.. 12ம் வகுப்பு படிக்கும்போதே திரைக்கு வந்த சீதா.. கோலிவுட்டில் சாதித்த பாண்டியராஜனின் ’ஆண்பாவம்’!

கல்யாண வீடியோவால் செலக்ட் ஆன நாயகி.. 12ம் வகுப்பு படிக்கும்போதே திரைக்கு வந்த சீதா.. கோலிவுட்டில் சாதித்த பாண்டியராஜனின் ’ஆண்பாவம்’!

Aan Paavam : பொதுவாக நகைச்சுவை படங்களில் உணர்வுப்பூர்வமான திருப்பங்களோ, காட்சிகளே இருக்காது. இருந்தாலும் அவை படத்தின் ஸ்பீடு பிரேக்கர்களாக இருக்கும். ஆண் பாவத்தில் இவையனைத்தும் உண்டு. ஆனால், ஸ்பீடு பிரேக்கர்களாக இல்லாமல் நகைச்சுவையால் ஸ்பீடா மீட்டராக்கியிருப்பார்.

  • 19

    கல்யாண வீடியோவால் செலக்ட் ஆன நாயகி.. 12ம் வகுப்பு படிக்கும்போதே திரைக்கு வந்த சீதா.. கோலிவுட்டில் சாதித்த பாண்டியராஜனின் ’ஆண்பாவம்’!

    பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்த பாண்டியராஜன், 1985 இல் தனது 26 வது வயதில் இயக்குனரானார். முதல் படம் கன்னிராசி. பிரபு, ரேவதி நடித்த அந்தப் படத்தின் கதையை பாண்டியராஜன் எழுத, பாக்யராஜிடம் உதவி இயக்குனர்களாக இருந்த ஜி.எம்.குமாரும், லிவிங்ஸ்டனும் எழுதினர். படம் 100 நாள்கள் ஓடி வெற்றிப் படமானது.

    MORE
    GALLERIES

  • 29

    கல்யாண வீடியோவால் செலக்ட் ஆன நாயகி.. 12ம் வகுப்பு படிக்கும்போதே திரைக்கு வந்த சீதா.. கோலிவுட்டில் சாதித்த பாண்டியராஜனின் ’ஆண்பாவம்’!

    அதே வருடம் தனது கதை, திரைக்கதை, வசனம் இயக்கத்தில் ஆண் பாவம் படத்தை தொடங்கினார் பாண்டியராஜன். இதில் பாண்டியன் ஹீரோ. இரு நாயகிகள், சீதா மற்றும் ரேவதி. இன்னொரு ஹீரோவாக பாண்டியராஜன் நடித்தார். திரையில் அவர் முதன்மை கதாபாத்திரம் ஏற்ற முதல் படம் இது.

    MORE
    GALLERIES

  • 39

    கல்யாண வீடியோவால் செலக்ட் ஆன நாயகி.. 12ம் வகுப்பு படிக்கும்போதே திரைக்கு வந்த சீதா.. கோலிவுட்டில் சாதித்த பாண்டியராஜனின் ’ஆண்பாவம்’!

    ஆண் பாவத்தின் முதல் பிளஸ் பாயின்ட் அதன் எளிமையான கதை. சக்கரப்பட்டியைச் சேர்ந்த ராமசாமிக்கு இரண்டு மகன்கள். பெரிய பாண்டி, சின்ன பாண்டி. பெரிய பாண்டிக்கு ராமசாமி அரசம்பட்டியில் பெண் பார்க்கிறார். பெண் பிடித்துப் போகிறது. மாப்பிள்ளையும் பெண்ணை பார்க்க வேண்டுமல்லவா. தனியாகச் செல்லும் பெரிய பாண்டி, தான் பார்க்க வேண்டிய பெண்ணிற்குப் பதில் இன்னொரு பெண்ணை பார்த்து விடுகிறான். பெண்ணிற்கு மாப்பிள்ளையையும், மாப்பிள்ளைக்கு பெண்ணையும் பிடித்துப் போகிறது. சாப்பிட உட்காரும் போதுதான், அந்தப் பெண்ணை பார்க்க வருவதாகச் சொன்ன மாப்பிள்ளை வேறு ஆள் என்பது தெரிய வருகிறது. ஆனாலும், பெரிய பாண்டியால் தான் பார்த்த பெண்ணை மறக்க முடியவில்லை. அந்தப் பெண்ணிற்கும் அதே நிலை. இந்த காதல் விவகாரம் அறிந்த ராமசாமி பார்த்த பெண் தற்கொலைக்கு முயல, தலையில் அடிபட்டு அவளுக்கு குரல் தடைபடுகிறது. அவளைத்தான் பெரிய பாண்டி கட்டியாக வேண்டும் என்று ராமசாமி பிடிவாதம் பிடிக்க, தம்பி சின்ன பாண்டியின் குயுத்தியால் எப்படி பெரிய பாண்டி தனது காதலியுடன் ஒன்றிணைந்தான் என்பது கதை.

    MORE
    GALLERIES

  • 49

    கல்யாண வீடியோவால் செலக்ட் ஆன நாயகி.. 12ம் வகுப்பு படிக்கும்போதே திரைக்கு வந்த சீதா.. கோலிவுட்டில் சாதித்த பாண்டியராஜனின் ’ஆண்பாவம்’!

    சீரிசாக தெரியும் இந்தக் கதையை சிரிக்கச் சிரிக்க எடுத்திருந்தார் பாண்டியராஜன். படத்தில் அனைவருக்கும் அவரவர் ஒரிஜினல் பெயரையே ஒட்டியிருந்தனர். ராமசாமியாக நடித்தவர் வி.கே.ராமசாமி. பெரிய பாண்டியாக பாண்டியன், சின்ன பாண்டியாக பாண்டியராஜன். பாண்டியன் காதலிக்கும் பெண்ணாக சீதா, தற்கொலைக்கு முயன்ற பெண்ணாக ரேவதி.

    MORE
    GALLERIES

  • 59

    கல்யாண வீடியோவால் செலக்ட் ஆன நாயகி.. 12ம் வகுப்பு படிக்கும்போதே திரைக்கு வந்த சீதா.. கோலிவுட்டில் சாதித்த பாண்டியராஜனின் ’ஆண்பாவம்’!

    சில படங்கள்தான் எக்காலத்திற்கும், எல்லாத் தரப்பினருக்குமான படமாக அமையும். அப்படியொரு படம் ஆண் பாவம். அதற்கு முக்கிய காரணம், படத்தில் வன்மம் எங்குமே கிடையாது. அண்ணன் வி.கே.ராமசாமி டூரிங் டாக்கீஸ் திறந்துவிட்டார் என்ற பொறாமையில் அவரது தம்பி ஜனகராஜ் ஹோட்டல் ஒன்றை திறப்பார். அந்த பொறாமையும்கூட நகைச்சுவையாக, யாருக்கும் பாதிப்பில்லாத பொறாமையாக இருக்கும். பாண்டியனுக்கு திருமணம் நிச்சயமானதும், தம்பி ஜனகாராஜை ஹோட்டலுக்கு தேடிவரும் அண்ணன் வி.கே.ராமசாமி சரக்கு மாஸ்டரிடம், மூத்தவனுக்கு கல்யாணம் வச்சிருக்கேன், அந்த கழுதையை முன்ன நின்னு நடத்தித்தரச் சொல்லு என்பார். என்னை மாதிரி மூத்தவன் வாயில்லாதவன்னு அவனுக்கு ஊமைப் பொண்ணா பார்த்தியா என்று ஜனகராஜ் கேட்க, ஆங், இப்ப வந்து பேசு... நாலு இடத்துக்குப் போய் நீயில்ல நல்ல பொண்ணா பார்த்திருக்கணும் என்பார் வி.கே.ராமசாமி. அதெல்லாம் நான் சின்னவன்கிட்ட தினம் கேட்டுகிட்டுதான் இருக்கேன் என்பார் ஜனகராஜ். பொறாமையெல்லாம் வெளியில்தான், உள்ளுக்குள் ஓடுவதெல்லாம் அன்பும், பாசமும்தான்.

    MORE
    GALLERIES

  • 69

    கல்யாண வீடியோவால் செலக்ட் ஆன நாயகி.. 12ம் வகுப்பு படிக்கும்போதே திரைக்கு வந்த சீதா.. கோலிவுட்டில் சாதித்த பாண்டியராஜனின் ’ஆண்பாவம்’!

    சோகத்தை கடந்து செல்லும்விதமும் அலாதியானது. ரேவதி சூட்டிகையான பெண். நிச்சயித்த மாப்பிள்ளை வேறொரு பெண்ணை விரும்புவது அறிந்து தற்கொலை செய்ய கிணற்றில் குதித்து குரல் போய்விடும். எத்தனை வலிமிகுந்த சென்டிமெண்ட் காட்சி. தலையில் கட்டுடன் மருத்துவமனையில் படுத்திருக்கும் வருங்கால மருமகளை வி.கே.ராமசாமி தனது தாயுடன் (கொல்லங்குடி கருப்பாயி) பார்க்க வருவார். என் வீட்லயும் நிறைய சாமிங்க இருக்கு. எந்த சாமியும் பேசாதுன்னு அதையெல்லாம் தெருவிலயா வீசிட்டேன். அந்த மாதிரிதான் நீயும் என்று ரேவதியின் குறையை ஒரே வசனத்தில் கடந்து செல்வார்.

    MORE
    GALLERIES

  • 79

    கல்யாண வீடியோவால் செலக்ட் ஆன நாயகி.. 12ம் வகுப்பு படிக்கும்போதே திரைக்கு வந்த சீதா.. கோலிவுட்டில் சாதித்த பாண்டியராஜனின் ’ஆண்பாவம்’!

    தியேட்டர் பெயர் மாற்ற வரும் அதிகாரி பெரிய பாண்டி மற்றும் சின்ன பாண்டியிடம் அடிவாங்கி வி.கே.ராமசாமியின் வீட்டிற்கு நைந்த உடையுடன் படியேறி வருவார். கார்ல வந்தீங்களா இல்லை காரு உங்க மேல வந்திச்சா என்பார் வி.கே.ராமசாமி. ஓரமாத்தான் போனேன், இரண்டு மாடுங்க இடிச்சிடுச்சி என்பார் அதிகாரி. உள்ளேயிருந்து வரும் சின்ன பாண்டி பாண்டியராஜனை அதிகாரி அப்போதுதான் பார்ப்பார். என்ன அப்படி பார்க்கிறீங்க, நம்ம பையனை முன்னாடியே தெரியுமா? வி.கே.ராமசாமி கேட்க, நான் சொன்னேனில்ல இரண்டு மாடு, அது ஒண்ணு இதுதான் என்பார் அதிகாரி. கோபம், பொறாமை, சோகம், சென்டிமெண்ட் என அனைத்தையும் நகைச்சுவையால் கடந்து செல்லும் அழகே ஆண் பாவம் படத்தின் பலம்.
    இந்தப் படத்தில் கொல்லங்குடி கருப்பாயி பாட்டியை பாண்டியராஜன் அறிமுகப்படுத்தியிருந்தார். திருமணத்துக்கு அலைபாயும் பேரன் பாண்டியராஜனிடம் பாட்டி, என்னை கட்டிக்கோ என்பார். கடைசியில அதுதான் நடக்கப் போகுது என்பார் பாண்டியராஜன். சத்தம் கேட்டு வரும் வி.கே.ராமசாமியிடம் பாட்டி விஷயத்தைச் சொல்ல, ஏண்டா, எம் அம்மாவையா கட்டிக்கப் போற என்பார் வி.கே.ராமசாமி. நீ என் அம்மாவை கட்டிக்கிறப்ப நான் உன் அம்மாவை கட்டிக்கக் கூடாதா என்பார் பாண்டியராஜன். வசனம், காட்சி, கதாபாத்திரம் என அனைத்திலும் நகைச்சுவை வழிந்தோடும்

    MORE
    GALLERIES

  • 89

    கல்யாண வீடியோவால் செலக்ட் ஆன நாயகி.. 12ம் வகுப்பு படிக்கும்போதே திரைக்கு வந்த சீதா.. கோலிவுட்டில் சாதித்த பாண்டியராஜனின் ’ஆண்பாவம்’!

    இந்தப் படத்தில் சீதா அறிமுகமான போது பன்னிரெண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். கல்யாண வீடியோ ஒன்றில் அவரைப் பார்த்து, தேடிப் போய் ஒப்பந்தம் செய்தாராம் பாண்டியராஜன். ரேவதியுடன் அவருக்கு காதல் காட்சிகள் இல்லை. ஆனால், கிளைமாக்ஸில் அவர்கள் இருவரும் திருமணம் செய்யப் போகிறார்கள் என்பதை சூசகமாகக் காட்டி படத்தை முடித்திருப்பார்.படத்தில் முற்போக்கான காட்சிகளும் உண்டு. கல்யாணத்துக்கு முன்னாடி நல்ல நேரம் பார்த்து, தாம்பூலத்தட்டு மாற்றுவது குறித்து ரேவதியின் அப்பா விஸ்வநாதன் சொல்ல, அட, இதுக்கெல்லாம் என்ன கால நேரம் பார்க்கிறது. உங்களுக்கு எதையாவது மாத்தணும் அவ்வளவுதானே என்று அவரது தோளில் இருக்கும் துண்டை எடுத்துவிட்டு தனது தோளில் கிடக்கும் துண்டை போட்டு விடுவார் வி.கே.ராமசாமி. அதேபோல், வரதட்சணை குறித்த ரேவதியின் டயலாக்கும் சிறப்பு.

    MORE
    GALLERIES

  • 99

    கல்யாண வீடியோவால் செலக்ட் ஆன நாயகி.. 12ம் வகுப்பு படிக்கும்போதே திரைக்கு வந்த சீதா.. கோலிவுட்டில் சாதித்த பாண்டியராஜனின் ’ஆண்பாவம்’!

    பொதுவாக நகைச்சுவை படங்களில் உணர்வுப்பூர்வமான திருப்பங்களோ, காட்சிகளே இருக்காது. இருந்தாலும் அவை படத்தின் ஸ்பீடு பிரேக்கர்களாக இருக்கும். ஆண் பாவத்தில் இவையனைத்தும் உண்டு. ஆனால், ஸ்பீடு பிரேக்கர்களாக இல்லாமல் நகைச்சுவையால் ஸ்பீடா மீட்டராக்கியிருப்பார். வாய்விட்டு சிரிக்கிற படங்களுக்கு மத்தியில் மனம்விட்டு சிரிக்க ஒரு படம் ஆண் பாவம்.

    MORE
    GALLERIES