நடிகர் ஆதியும், நடிகை நிக்கி கல்ராணியும் கடந்த 18-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். இந்தத் திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கலந்துக் கொண்டனர். இதையடுத்து தங்கள் திருமண படங்களை இருவருமே சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அதில், “அன்பை கொண்டாடுகிறோம். எங்கள் நலம் விரும்பிகள் அனைவரின் முன்னிலையிலும் திருமணம் செய்துகொண்டது, என்றென்றும் போற்றப்படும் ஒரு தருணம். இந்த புதிய பயணத்தை ஒன்றாக தொடங்கும் நாங்கள், உங்கள் ஆசீர்வாதத்தையும் அன்பையும் நாடுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.