ஆடு மேய்க்கும்போது பாடிய பாடல் தேசிய விருதை வென்ற அற்புத நிகழ்வு… கவனம் ஈர்க்கும் நஞ்சம்மா பாட்டி
உலகத்தை தனக்கு காட்டி விட்டு உலகத்தை விட்டு சச்சி பிரிந்து சென்று விட்டதாக வேதனை தெரிவிக்கும் நஞ்சம்மா அவரின் நினைவாக தேசிய விருதை பெற்றுகொள்வேன் என்றும் கூறுகிறார்.
தேசிய திரைப்பட விருதுகளின் தென் மாநிலங்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளவர் சிறந்த பின்னணி பாடகி விருதை பெற்ற நஞ்சம்மா
2/ 10
தமிழ் நாடு கேரள எல்லையான அட்டப்பாடியை சேர்ந்தவர் நஞ்சம்மா. பழங்குடி இனத்தை சேர்ந்த நஞ்சியம்மாவுக்கு தாய் மொழி தமிழே.
3/ 10
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி கேரள வசம் சென்றது. இதனால், அவர் கேரளவாசி ஆகி விட்டார்.
4/ 10
சச்சி என்ற அழைக்கப்பட்ட மறைந்த மலையாள இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தன் இயக்கிய ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தில் ''களக்காத்த '' பாடலுக்காக நஞ்சம்மாவுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
5/ 10
அட்டப்பாடி காடுகளில் ஆடு மேய்க்கும் நஞ்சம்மா தனது இட்டுக்கட்டில் நாட்டார் பாடல்களை பாடுவதை வழக்கமாக கொண்டவர். அவ்வாறு அவர் சிந்தனையில் உதித்தது தான் ''களக்காத்த சந்தனமேரம் பாடல்.
6/ 10
அயப்பனும் கோஷியும் படத்தில் பாடுவதற்கு முன்பாகவே சிந்து சாஜன் என்ற பெண் இயக்குநர் இயக்கிய அகுடு நாயக என்ற ஆவணப்படத்தில் நஞ்சம்மா ஒருபாடல் பாடியுள்ளார்.
7/ 10
எனினும், அய்யப்பனும் கோஷியும் பட பாடலே, நஞ்சம்மாவை புகழின் வெளிச்சத்திற்கு அழைத்து சென்றது. இதற்கு முழு காரணம் இயக்குநர் சச்சியும், இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய்யும் தான்.
8/ 10
தமிழில் வார்த்தைகளும் உச்சரிப்பில் மலையாளமும் கலந்து பாடப்பட்ட “களக்காத்த” பாடல் கொரோனா காலத்தில் பட்டி தொட்டி எங்கும் பரவியது
9/ 10
தனது பாட்டிற்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என தான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்று தன்னடக்கத்துடன் கூறுகிறார் நஞ்சியம்மா
10/ 10
உலகத்தை தனக்கு காட்டி விட்டு உலகத்தை விட்டு சச்சி பிரிந்து சென்று விட்டதாக வேதனை தெரிவிக்கும் நஞ்சம்மா அவரின் நினைவாக தேசிய விருதை பெற்றுகொள்வேன் என்றும் கூறுகிறார்.