ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » 58 வருடங்களை நிறைவு செய்யும் எம்ஜிஆரின் தாயின் மடியில் படம்!

58 வருடங்களை நிறைவு செய்யும் எம்ஜிஆரின் தாயின் மடியில் படம்!

1948 ஹிந்தியில் வெளியான கல்பனா திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி தனது சினிமா வாழ்வை சுப்பாராவ் தொடங்கினார்.

 • News18
 • 18

  58 வருடங்களை நிறைவு செய்யும் எம்ஜிஆரின் தாயின் மடியில் படம்!

  58 வருடங்களுக்கு முன்பு 1964 டிசம்பர் 18 தாயின் மடியில் திரைப்படம் வெளியானது. நாளையுடன் இந்தப் படம் வெளியாகி 58 வருடங்கள் நிறைவு பெறுகிறது.  எம்ஜிஆர், சரோஜாதேவி, எம்என் நம்பியார், எம்ஆர் ராதா, நாகேஷ், டி எஸ் முத்தையா, திருப்பதிசாமி, பண்டரிபாய், மனோரமா, ஜி சகுந்தலா, கீதாஞ்சலி ஆகியோர் நடித்த இந்தப் படத்துக்கு எஸ்எம் சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார். சோமம் திரைக்கதை, வசனத்தை எழுத அதுர்த்தி சுப்பாராவ் படத்தை இயக்கினார்.

  MORE
  GALLERIES

 • 28

  58 வருடங்களை நிறைவு செய்யும் எம்ஜிஆரின் தாயின் மடியில் படம்!

  அதுர்த்தி சுப்பாராவ் (அல்லது ஏ.சுப்பாராவ்) அந்தக் காலத்தில் தெலுங்கில் குறிப்பிடத்தகுந்த இயக்குனராக இருந்தார். இயக்கத்துடன் எடிட்டிங் ஒளிப்பதிவு ஆகிய துறைகளிலும் வல்லமை பெற்றிருந்தார்.

  MORE
  GALLERIES

 • 38

  58 வருடங்களை நிறைவு செய்யும் எம்ஜிஆரின் தாயின் மடியில் படம்!

  1948 ஹிந்தியில் வெளியான கல்பனா திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி தனது சினிமா வாழ்வை சுப்பாராவ் தொடங்கினார். 1954 அமர சந்தேஷம் என்ற தெலுங்கு படத்தை இயக்கி இயக்குனராக தடம் பதித்தார். அதன் பிறகு தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழிகளில் தொடர்ச்சியாக படங்கள் இயக்கினார். அதிகமும் தெலுங்கு திரைப்படங்கள்.

  MORE
  GALLERIES

 • 48

  58 வருடங்களை நிறைவு செய்யும் எம்ஜிஆரின் தாயின் மடியில் படம்!

  தமிழில் 1957 இல் வெளியான எங்கள் வீட்டு மகாலட்சுமி இவர் திரைக்கதை எழுதி, இயக்கி, எடிட் செய்த திரைப்படம் ஆகும். இது தவிர மஞ்சள் மகிமை, எங்கள் குலதேவி, பாட்டாளியின் வெற்றி, குமுதம் உட்பட பல திரைப்படங்களை இயக்கினார். 1964 எம் ஜி ஆர், சரோஜாதேவி நடித்த தாயின் மடியில் திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார்.

  MORE
  GALLERIES

 • 58

  58 வருடங்களை நிறைவு செய்யும் எம்ஜிஆரின் தாயின் மடியில் படம்!

  இந்தப் படத்தில் எம்ஜிஆர் ராஜா என்ற ஜாக்கியாக நடித்திருந்தார். வழக்கம் போல் நேர்மையான வாழ்க்கை கொண்டவர். அனாதையான அவருக்கும் பணக்கார பிசினஸ்மேனின் மகள் ஜீவாவுக்கும் காதல் ஏற்படும். இந்த நேரத்தில் தான் இறந்து போய்விட்டதாக நினைத்த அம்மா உயிருடன் இருப்பதை எம்ஜிஆர் அறிந்து கொள்வார்.

  MORE
  GALLERIES

 • 68

  58 வருடங்களை நிறைவு செய்யும் எம்ஜிஆரின் தாயின் மடியில் படம்!

  அம்மாவை சந்திக்கும் ஆவலில் இருக்கும் அவருக்கு பேரிடி காத்திருக்கும். எம்ஜிஆரின் தந்தை என தாய் கை காட்டுவது சரோஜாதேவியின் தந்தையை. எம்ஜிஆர் மட்டுமல்ல பார்வையாளர்களும் அதிர்ச்சியடையும் உண்மையாக அது இருக்கும். அடுத்து என்ன நடந்தது என்பது கதை.

  MORE
  GALLERIES

 • 78

  58 வருடங்களை நிறைவு செய்யும் எம்ஜிஆரின் தாயின் மடியில் படம்!

  ஏ.சுப்பாராவ் தெலுங்கில் முக்கியமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். 7 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். எனினும் தமிழில் அவரது படங்கள் பெரிய அளவில் தடம் பதிக்கவில்லை. தாயின் மடியில் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

  MORE
  GALLERIES

 • 88

  58 வருடங்களை நிறைவு செய்யும் எம்ஜிஆரின் தாயின் மடியில் படம்!

  எஸ் எம் சுப்பையா நாயுடுவின் இசையில் ரு பாடலை கண்ணதாசன் எழுதினார் மீதி 5 பாடல்களையும் வாலி எழுதினார். பாடல்களும் ஒப்பீட்டு அளவில் எம் ஜி ஆரின் பிறபடங்களின் வெற்றியையும் வரவேற்பையும் பெறவில்லை. நாளை தாயின் மடியில் 58 வது வருட நிறைவை கொண்டாடுகிறது.

  MORE
  GALLERIES