முகப்பு » புகைப்பட செய்தி » இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள் ஒரு லிஸ்ட்!

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள் ஒரு லிஸ்ட்!

இந்த வாரம் திரையரங்குகளில் சந்தானத்தின் ஏஜெண்ட் கண்ணாயிரம், அதர்வாவின் பட்டத்து அரசன், சசிகுமாரின் காரி மற்றும் நிகில் முருகனின் பவுடர் ஆகிய தமிழ் படங்கள் வெளியாகவுள்ளது.

  • News18
  • 14

    இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள் ஒரு லிஸ்ட்!

    தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த ஏஜென்ட் சீனிவாச ஆத்ரேயா என்ற திரைப்படத்தை தமிழில் ஏஜென்ட் கண்ணாயிரம் என ரீமேக் செய்துள்ளனர்.  சந்தானம் நடித்துள்ள அந்த திரைப்படத்தை மனோஜ் பீதா என்பவர் தயாரித்து, இயக்கியுள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் ரியா சுமன், ஷ்ருதி ஹரிஹரன், ரெடின் கிங்க்ஸ்லி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    MORE
    GALLERIES

  • 24

    இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள் ஒரு லிஸ்ட்!

    களவாணி, வாகை சூடவா உள்ளிட்ட படங்களை இயக்கிய சற்குணம் தற்போது அதர்வா நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் அதர்வாவுடன் ராஜ்கிரண், ஆஷிகா ரங்கநாத், ராதிகா சரத்குமார், ஆர்கே சுரேஷ், ராஜ் அய்யப்பா, பால சரவணன், சத்ரு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சற்குணம் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள படம் கிராமத்துக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படம் நாளை நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    MORE
    GALLERIES

  • 34

    இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள் ஒரு லிஸ்ட்!

    சசிகுமார், பார்வதி அருண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காரி. அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, அம்முஅபிராமி, பிரேம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்கள். டி. இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக லக்ஷ்மன் குமார் காரி படத்தை தயாரித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் நாளை நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    MORE
    GALLERIES

  • 44

    இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள் ஒரு லிஸ்ட்!

    வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் நாயகனாக நடிக்க, வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீ ஜி, இயக்கத்தில் ஜீ மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பவுடர்”. இந்தப் படத்தில் வித்யா பிரதீப், சாந்தினி தேவா, விஜய் ஸ்ரீ ஜி, மொட்ட ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி, ஆதவன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பவுடர்’. நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இபடம் நாளை நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    MORE
    GALLERIES