முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » தமிழரசன் முதல் யாத்திசை வரை.. இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட்!

தமிழரசன் முதல் யாத்திசை வரை.. இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட்!

ஏப்ரல் 21ம் தேதியான நாளை தியேட்டர்களில் சில தமிழ் படங்கள் வெளியாகவுள்ளன.

  • News18
  • 15

    தமிழரசன் முதல் யாத்திசை வரை.. இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட்!

    தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கொலை, பிடிக்காத மனிதன், வள்ளி மயில் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படத்தை இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கி உள்ளார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இந்தப் படம் நாளை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    தமிழரசன் முதல் யாத்திசை வரை.. இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட்!

    யோகி பாபு நாயகனாக நடித்திருக்கும் படம் யானை முகத்தான். நகைச்சுவைக்கும், அதே சமயம் சிந்திக்கும் வகையிலும் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். இதில் யோகிபாபுவுடன் நகைச்சுவை நடிகர்களான ரமேஷ் திலக் மற்றும் கருணாகரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் நாளை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    தமிழரசன் முதல் யாத்திசை வரை.. இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட்!

    விமல் நாயகனாக நடித்துள்ள படம் 'தெய்வ மச்சான்'. அவர் ஜோடியாக நேகா நடிக்கிறார். பாண்டியராஜன், 'ஆடுகளம்' நரேன், பாலசரவணன், வேல.ராமமூர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். கேமில் ஜே. அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை மார்டின் நிர்மல் குமார் இயக்கியுள்ளார். உதய் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் உதயகுமார், கீதா உதயகுமார், எம்.பி.வீரமணி தயாரித்துள்ளனர். இந்தப் படம் நாளை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    தமிழரசன் முதல் யாத்திசை வரை.. இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட்!

    இடைக்கால பாண்டிய மன்னனான ரணதீரன் பின்னணியில் யாத்திசை என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.  இந்த திரைப்படத்தை தரணி ராசேந்திரன் என்பவர் இயக்கியிருக்கிறார்.  முழுக்க முழுக்க புது முகங்களின் பங்களிப்புடன் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படம் நாளை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    தமிழரசன் முதல் யாத்திசை வரை.. இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட்!

    நடிகர் விமல், தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குலசாமி. இப்படத்திற்கு விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ளார். இதில் முன்னாள் டி.ஜி.பி. ஜாங்கிட்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மிக் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்த்ப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் நாளை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    MORE
    GALLERIES