1995 ஆம் ஆண்டு பி. சி. ஸ்ரீராம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் குருதிப்புனல். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அர்ஜுன், கௌதமி, நாசர் போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்டதாகும். இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹே ராம், 2000ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் தமிழ், இந்தி என இரு மொழியிலும் எடுக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ஷாருக் கான், ராணி முகர்ஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். கமல்ஹாசனே இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்தார். இத்திரைப்படம் இந்தியாவின் சார்பில் அந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெறுவதற்கான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.
விஸ்வரூபம் 2013 இல் வெளிவந்த திரைப்படம் ஆகும். தெலுங்கில் விஸ்வரூபம் எனும் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் இந்தியில் விஸ்வரூப் எனும் பெயரிலும் வெளியானது. இப்படத்தை எழுதி-இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் கமல் ஹாசன் நடித்திருந்தார். இந்த படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.
தூங்காவனம் என்பது 2015இல் வெளிவந்த திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ராஜேஸ் எம்.செல்வா' இயக்கினார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் முதன்மைக் கதாப்பாத்திரமாக நடித்தார். இவருடன் திரிசா, பிரகாஷ் ராஜ், கிஷோர் ஆகியோரும் நடித்தனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்ட படமாகும், தெலுங்கில் சீகட்டி ராஜ்ஜியம் எனும் பெயரில் வெளியானது. இத்திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஸ்லீப்லஸ் னைட் எனும் திரைப்படத்தின் தழுவல் ஆகும். இத்திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் மற்றும் சிறி கோகுலம் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரித்தன. இது பின்னர் ஹிந்தியில் 'காக்கி தா ரியல் போலீஸ்' என மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.
விஸ்வரூபம் 2, 2018ல் வெளிவந்த திரைப்படம் ஆகும். இது 2013ல் வெளிவந்த விஸ்வரூபம் தமிழ்த் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். இப்படம் இந்தியில் விஸ்வரூப் 2 என்ற பெயரில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தை எழுதி-இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்தார். இந்த படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.