தம்பட் (Tumbadd)
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான தம்பட் இந்தியாவின் சிறந்த ஹாரர் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மஹாராஷ்டிராவில் உள்ள கிராமத்தில் இளைஞர் ஒருவர் தன் கிராமத்தின் மர்மம் குறித்து அறியப்படும்போது கோயில் ஒன்றில் புதையல் ஒன்று இருப்பது தெரியவருகிறது. இந்தப் படம் அமேசான் பிரைம் வீடியோவில் காணலாம்.
மாசான் (Maasaan)
விக்கி கவுசல், ஸ்வேதா திரப்பாதி இணைந்து நடித்துள்ள இந்தப் படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது. உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் வசிக்கும் 4 பேர் பற்றிய கதை. 4 பேரின் வாழ்க்கையில் சாதிய ஏற்றத்தாழ்வுகள், காதல் இழப்பு என அவர்களின் வாழ்க்கையில் எவ்வாறு பாதிக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக சொன்னப் படம். அமேசான் பிரைம் வீடியோவில் இந்தப் படத்தைக் காணலாம்.
ஏ டெத் இன் தி குஞ்ச் (A Death in the Gunj)
யாரிடமும் அதிகம் பேசாத தயக்கம் நிறைந்த இளைஞன் ஷுது விடுமுறையை கழிக்க குடும்பத்துடன் ஜார்கண்ட் செல்கிறார். இந்தப் படம் குடும்பத்தில் நிலவும் பிற்போக்குத்தனங்கள் அந்த இளைஞனை மனதளவில் பாதிக்கிறது என்பதை பேசியிருக்கிறது. இந்தப் படத்தை அமேசான் பிரைமில் காணலாம்.
புஷ்பா
தெலுங்கு சினிமாவில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றிபெற்ற படம். செம்மர கடத்தல் பின்னணியில் ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படம் வீக் எண்ட்டில் பார்க்க ஒரு நல்ல சாய்ஸ்.இந்தப் படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் காணலாம்.
அசுரன்
எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சிவசாமி என்ற விவசாயியாகவே வாழ்ந்திருப்பார் தனுஷ். சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை பேசிய இந்தப் படம் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதை அள்ளியது. சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ பெற்றார். அமேசான் பிரைமில் இந்தப் படத்தைக் காணலாம்.