சிவாஜி கணேசன், சரோஜா தேவி, விஜய் நடிப்பில் உருவான ஒன்ஸ்மோர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
2/ 8
தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்த 6வது படமாக ஒன்ஸ்மோர் அமைந்தது. 1997-ல் வெளியான இந்த திரைப்படம், காதல், காமெடி, சென்டிமென்ட் என அட்டகாசமாக உருவாக்கப்பட்டிருக்கும்.
3/ 8
இந்தப் படத்தில்தான் முதன் முதலில் விஜய்யுடன் சிம்ரன் ஜோடி சேர்ந்தார். இது அவருக்கு 2வது படமாக அமைந்தது. விஐபி படத்தில்தான் சிம்ரன் தமிழில் அறிமுகம் ஆனார்.
4/ 8
ஒன்ஸ்மோர் படத்தில் விஜய் – சிம்ரன் இடையிலான காதல் காட்சிகள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. கவுரவ தோற்றத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரோஜா தேவி ஆகியோர் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.
5/ 8
இருவரின் கிளாசிக்கான காதல் காட்சிகள் பழைய படங்களின் நினைவுகளை மலரச் செய்தன.
6/ 8
பணக்கார தந்தைக்கு மகனாக இருக்கும் விஜய் முதலில் மோசமான பாதைக்கு சென்று பின்னர் பொறுப்பான நபராக மாறுவது போன்று கதைக் களம் அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு காட்சியிலும் தளபதி விஜய் துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருப்பார்.
7/ 8
இந்நிலையில் படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதையொட்டி ஒன்ஸ்மோர் படத்தின் மலரும் நினைவுகளை ரசிகர்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
8/ 8
1997 கால கட்டத்தில் விஜய்க்கு லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர் ஆகியவை ஹாட்ரிக் வெற்றிப் படங்களாக அமைந்தன.