குஷி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் ஆகிறது.
2/ 16
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்திருந்த குஷி திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
3/ 16
குஷி திரைப்படம் விஜய்க்கும் ஜோதிகாவுக்கும் இன்று வரை மிகச் சிறப்பான படமாக அமைந்துள்ளது.
4/ 16
விஜய் மறக்க முடியாத நடிப்பை வெளிப்படுத்திய இந்தப் படம் அவருக்குப் புதிய ரசிகர்களையும் பெற்றுத் தந்தது.
5/ 16
அதில் வரும் விஜய்யின் சிவா கதாபாத்திரமும், ஜோதிகாவின் ஜென்னி கதாபாத்திரமும் என்றும் பசுமையானது.
6/ 16
காதலுடன் சேர்ந்து, குட்டி குட்டி சேட்டைகளையும் செய்து, ரசிகர்களை கவர்ந்தார் விஜய்.
7/ 16
குஷி படத்தில் ஷில்பா ஷெட்டி ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
8/ 16
அந்தப் பாடல் மட்டுமின்றி மற்ற அனைத்துப் பாடல்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
9/ 16
குஷி படத்தில் காலேஜ் பியூட்டி அனிதாவாக வலம் வரும் மும்தாஜ், விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
10/ 16
அந்த காலகட்டத்தில் விஜய் - சிம்ரன் ஜோடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததால், ஜோதிகாவின் கதாபாத்திரத்தில், நடிகை சிம்ரன் தான் முதலில் நடிப்பதாக இருந்தது. பிறகு, சில காரணங்களால் சிம்ரனை ரீபிளேஸ் செய்து, ஜோதிகா அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.
11/ 16
விஜய்யின் குஷி, கண்ணுக்குள் நிலவு என இரு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடந்தது.
12/ 16
குஷியின் வெற்றியை தொடர்ந்து, இதே கதையை தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்தார் எஸ்.ஜே. சூர்யா.
13/ 16
குஷியை இந்தியில் தயாரித்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், சமீபமாக அஜித் படங்களை தயாரித்து வருபவருமான போனி கபூர் தான்.
14/ 16
குஷி வெற்றியின் காரணத்தால் தான், திருமலை படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பு பெற்றார் நடிகை ஜோதிகா.
15/ 16
குஷி படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களுமே பெரிய ஹிட் அடித்தன. குறிப்பாக, 'மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்' பாடல் மைக்கல் ஜாக்ஸனின் "Why You Wanna Trip On Me" என்ற பாடலில் இருந்து இன்ஸ்பைர் ஆகி எடுக்கப்பட்ட பாடல் என்றும் கூறப்பட்டது.
16/ 16
குஷி படம் வெளியாகி இன்றோடு 22 ஆண்டுகள் ஆவதையொட்டி அதனை #22YearsOfKushi என்ற ஹேஷ்டேக்கில் கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.