ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் சாமி. இந்தப் படம் வெளியாகி 20 வருடங்களை நிறைவு செய்துள்ளது.
2/ 10
இந்தப் படத்தை கவிதாலயா சார்பில் கே.பாலசந்தர் தயாரித்திருந்தார்.
3/ 10
ஹீரோ ஆறுச்சாமி கதாப்பாத்திரத்தையும் வில்லன் பெருமாள் பிச்சை கதாப்பாத்திரத்தையும் மிக தனித்துவமாக வடிவமைத்திருந்தது படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
4/ 10
இயக்குநர் ஹரியின் பர பர ஸ்கிரீன்பிளேக்கு துவக்கமாக அமைந்தது இந்தப் படம்.
5/ 10
வில்லனாக ஏலே சாமி... என மிரட்டினார் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து இதே போல பல படங்களில் நடித்தார்.
6/ 10
முதன்முறையாக ஜோடி சேர்ந்த விக்ரம் - திரிஷா ஜோடியும் இந்தப் படத்துக்கு ஹைலைட்டாக அமைந்தது.
7/ 10
அவன் பேசும்போது காது ஆடு கவனிச்சியா நிச்சயம் அவன் நம்ம சாதிக்காரனா தான் இருப்பான் என இந்தப் படத்தின் வசனங்களும் பெரிதும் கவனம் ஈர்த்தன.
8/ 10
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கல்யாணம் தான்.... இவன் தானா... பிடிச்சிருக்கு போன்ற பாடல்கள் பெரிய ஹிட்டடித்தன. பின்னணி இசையில் படத்துக்கு கூடுதல் மாஸ் சேர்த்திருந்தார்.
9/ 10
இந்தப் படத்தின் வெற்றிவிழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துகொண்டிருந்தனர். விழாவில் விக்ரம், விஜய், சூர்யா ஆகியோரின் தனித்தன்மைகள் குறித்து ரஜினிகாந்த் பாராட்டி பேசியிருந்தார்.
10/ 10
ஒரு பக்கா கமர்ஷியல் படத்துக்கு இன்றளவும் உதாரணமாக இருந்து வருகிறது சாமி.