மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது அதிலிருந்து மெல்ல மீண்டுவருகிறார். சமந்தா நடிப்பில் சாகுந்தலம் கடந்த 14 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் சாகுந்தலம் திரைப்படம் ரசிகர்களைப் பெரிதும் கவரவில்லை என்றும் இதனால் படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.             மேலும் வருண் தவானுடன் இணைந்து சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் 16 வயதில் நடிகை சமந்தாவின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.