ரசிகர் கேட்டதால் தனது கணவரின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார் சீரியல் நடிகை ஃபரினா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஃபரினா. சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ஃபரினாவை இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ஃபரினாவிடம் உங்கள் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிடுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்டார். ரசிகர் கேட்டதால் தான் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டார் ஃபரினா. ஃபரினா தனது கணவரின் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டிருப்பதால் சீரியல் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.