3. தர்பார் -அமேசான் பிரைம் (Amazon Prime) : ஏ.ஆர். முருகதாஸ் எழுதி இயக்கிய தர்பார் 2020 ஆம் ஆண்டின் முதல் பெரிய பான்-இந்தியன் வெளியீடு தான் தர்பார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி மற்றும் நிவேதா தாமஸ் ஆகியோர் துணை நடிகர்களாக நடித்துள்ளனர். 150 நிமிட அதிரடி த்ரில்லர் படத்தில் போதைப்பொருள் மற்றும் பெண்கள் கடத்தல் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கை எடுத்து விசாரிப்பதில் ஏற்படும் சிக்கலை மையமாக கொண்டுள்ளது.
4. மெர்சல் -நெட்ஃபிக்ஸ் : மெர்சல் ரசிகர்களை ஈர்க்கக்கூடிய மற்றொரு பிளாக் பாஸ்டர் திரைப்படம். இது ஒரு பழிவாங்கும் கதைக்களத்தை கொண்டு எடுக்கப்பட்ட நாடகம். பிரிந்த இரண்டு சகோதரர்களின் பின்னணி வாழ்க்கையை எடுத்துரைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த படத்தில் தொடக்கத்தில்விஜய் மருத்துவர், மற்றும் மாயாஜாலம் செய்யும் மந்திரவாதி என இரு வேடங்களில் நடித்துள்ளார். இரு சகோதரர்களும் தங்கள் பெற்றோரின் அகால மரணத்திற்குப் பழிவாங்குவதற்காகவும், படத்தின் போக்கில் தங்கள் உறவை சரிசெய்யவும் ஒன்றாக இணைகின்றனர். இந்த படத்தில் மூன்றாவது கதாபாத்திரத்திலும் விஜய் நடித்துள்ளார். தொடக்கத்தில் இருந்து முடிவு வரை கதையின் சுவாரஸ்யம் குறையாது.
5. பேட்ட - நெட்பிளிக்ஸ் (Netflix) : அதிரடி நிறைந்த இந்த படத்தில் சர்வதேச புகழ்பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். விடுதி வார்டனாக பணியமர்த்தப்பட்ட ஒருவரின் கதையைப் மையமாக கொண்டது. சூப்பர் ஸ்டார்க்கு ஏற்றவாறு மாஸ்ஸான என்ட்ரி மாற்றி வசனங்கள் இருக்கும். இந்த படத்தில் இந்திய சினிமாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமான நவாசுதீன் சித்திகி சிங்காரமாக நடித்துள்ளனர். ரஜினிகாந்தைப் போலவே, சித்திகியும் விரைவில் சர்வதேச புகழ் பெற்ற நடிகர் ஆவார். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி நடித்துள்ளார்.