'அவரை ப்ரோ என்று தான் அழைப்பேன்'... வீட்டில் நிகழ்ந்த இழப்பு குறித்து இயக்குநர் அட்லீ உருக்கம்..
தனது வீட்டில் நிகழ்ந்த இழப்பு குறித்து சமூகவலைதள பக்கத்தில் இயக்குநர் அட்லீ உருக்கமாக கருத்து பதிவிட்டுள்ளார்.
Web Desk | September 14, 2020, 4:40 PM IST
1/ 5
தனது வீட்டில் நடந்த சோக சம்பவம் குறித்து சமூகவலைதள பக்கத்தில் இயக்குநர் அட்லீ உருக்கமாக கருத்து பதிவிட்டுள்ளார்.
2/ 5
பிரபல இயக்குநர் அட்லீயும் ப்ரியாவும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ப்ரியாவின் தாத்தா கலியராஜ் காலமானார்.
3/ 5
தாத்தாவின் மரணத்தை அடுத்து இயக்குநர் அட்லீ தனது ட்விட்டரில் உருக்கமாக கருத்து பதிவிட்டுள்ளார். இயக்குநர் அட்லீ கூறியுள்ளதாவது, “ப்ரியாவின் தாத்தா காலமாகிவிட்டார். தன்னைத் தாத்தா என்று அழைப்பது அவருக்கு பிடிக்காது. அதனால் நான் அவரை ப்ரோ என்று தான் அழைப்பேன். அவருக்கு வயது 82.
4/ 5
கடந்த வாரம் கூட இருவரும் உரையாடிக் கொண்டிருந்தோம். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நண்பராகவும் ஆலோசகராகவும் இருந்தார். நீங்கள் உயிருடன் இல்லை என்னால் நம்பமுடியவில்லை ப்ரோ. இதயம் உடைந்து போயிருக்கிறது.
5/ 5
எங்கள் குடும்பம் ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டது. என் வாழ்க்கையில் உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. வாழ்க்கையில் எல்லோருக்கும் முடிவு உண்டு என்பதை உணர்கிறோம். எனவே உங்கள் அன்பையும், மகிழ்ச்சியையும் வாழும் வரை பகிருங்கள். நாம் வாழும் ஒவ்வொரு நாளும் கடவுளின் பரிசாகும்” என்று அட்லீ தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.