முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » 'பரஸ்பர மரியாதை' - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அஜித் மேனேஜர்.!

'பரஸ்பர மரியாதை' - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அஜித் மேனேஜர்.!

Ajith : அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தை இயக்குவது யார் என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை அனிருத் இயக்கவிருப்பதாக கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாததால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

  • 15

    'பரஸ்பர மரியாதை' - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அஜித் மேனேஜர்.!

    அஜித் குமார் நடிப்பில் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியான துணிவு படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெட்ஃபிளிக்ஸில் வெளியான பட இந்தப் படம் தேசிய அளவில் டிரெண்டிங்கில் இருந்தது.

    MORE
    GALLERIES

  • 25

    'பரஸ்பர மரியாதை' - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அஜித் மேனேஜர்.!


    இதனையடுத்து அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தை இயக்குவது யார் என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை அனிருத் இயக்கவிருப்பதாக கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாததால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களை மேலும் அதிர்ச்சியடைய செய்யும் தகவலை அஜித்தின் மேனேஜர் பகிர்ந்திருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 35

    'பரஸ்பர மரியாதை' - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அஜித் மேனேஜர்.!

    ஏகே 62 படத்துக்கு பிறகு மோட்டோர் சைக்கிள் சுற்றுப் பயணத்தை அஜித் மேற்கொள்ளவிருப்பதாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவரது சுற்றுப் பயணத்துக்கு Rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    'பரஸ்பர மரியாதை' - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அஜித் மேனேஜர்.!

    லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    'பரஸ்பர மரியாதை' - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அஜித் மேனேஜர்.!

    ஏற்கனவே துணிவு படத்துக்கு முன்பு இது போல் ஒரு உலக மோட்டார் சுற்றுப் பயணத்தை அஜித் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏகே 62 படத்துக்கு பிறகு உலக மோட்டார் சைக்கிள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதால் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

    MORE
    GALLERIES