என்னை அறிந்தால் படத்துக்குப் பின் மீண்டும் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2/ 7
அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் இன்று திரைக்கு வந்துள்ளது.
3/ 7
படத்தைப் பார்த்த ரசிகர்களும், விமர்சகர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
4/ 7
இந்தப் படத்துக்குப் பின் அஜித்தின் 60-வது படத்திலும் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 29-ம் தேதி துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5/ 7
இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இருவரும் இணைந்து என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தனர்.
6/ 7
இந்தப் படத்தின் மூலம் போனிகபூரின் மகளான ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.
7/ 7
அஜித் 60 படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லை என்பது உறுதியான நிலையில் ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.