நடிகையும், நடனக் கலைஞருமான சாய் பல்லவி 1992 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள கோத்தகிரியில் பிறந்தார்.
2/ 23
சாய் பல்லவி 2016 ஆம் ஆண்டு சியார்ச்சியா திபிலீசி மாநில மருத்துவப் பல்கலைக் கழகத்தில் தன்னுடைய மருத்துவப் படிப்பை முடித்துள்ளார்.
3/ 23
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் 'பிரேமம்' திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
4/ 23
மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய பிரேமம் திரைப்படத்தில் நடிகர் நிவின் பாலியுடன் இவர் நடித்திருந்த 'மலர்' என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் சாய்பல்லவி.
5/ 23
அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்திருந்த 'கலி' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
6/ 23
அதையடுத்து வருண் தேச்சுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த 'பிடா' திரைப்படம் மூலம் 2017 இல் தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமானார்.
7/ 23
பிடா திரைப்படத்தில் இவர் நடித்த 'பானுமதி' என்ற கதாபாத்திரத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களின் மனதிலும் நிரந்தர இடம் பிடித்துவிட்டார் சாய்பல்லவி.
8/ 23
குறிப்பிட்ட தெலுங்கு தொலைக்காட்சியில் 'பிடா' திரைப்படம் ஒளிபரப்பப்பட்டபோது தொலைக்காட்சிகளுக்கான தரவரிசையில் ஐந்தாவது முறையாக அதிகபட்ச இலக்கு அளவீட்டுப் புள்ளியை எட்ட இப்படம் காரணமாக இருந்தது என்பது குறிப்புடத்தக்கது.
9/ 23
இதையடுத்து ஏ.எல்.விஜய் இயக்கிய 'தியா' திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார் சாய் பல்லவி.
10/ 23
அதன் பின்னர் தனுஷ் நடித்த மாரி 2 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
11/ 23
அந்த படத்தில் இடம்பெற்றிருந்த 'ரவுடி பேபி' பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
12/ 23
இந்த பாடலுக்கு நடிகர் பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
13/ 23
2019 ஆம் ஆண்டு சூர்யாவுடன் 'என்ஜிகே' என்ற படத்தில் நடித்தார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை என்றே கூறலாம்.
14/ 23
தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சாய் பல்லவி.
15/ 23
நானி நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் வெளியாகியுள்ள ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
16/ 23
தெலுங்கில் நாக சைதன்யாவுடன் இவர் இணைந்து நடித்த ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் மிகுந்த வெற்றிப் பெற்றது.
17/ 23
தெலுங்கில் ராணா டகுபதிக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள 'விராட பருவம்' என்கிற திரைப்படம் வருகிற ஜூலை 1ஆம் தேதி வெளியாகிறது.
18/ 23
இப்படத்தில் நடிகை சாய் பல்லவி நக்சலைட்டாக நடித்துள்ளார்.
19/ 23
சாய் பல்லவி 2008ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ உங்களில் யார் அடுத்த பிரபுதேவா ‘ ரியாலிட்டி நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குகொண்டு இறுதி போட்டி வரை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
20/ 23
இவரது தங்கை பூஜா கண்ணன் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கிய "சித்திரைச் செவ்வானம்" படத்தில் நடித்துள்ளார்.
21/ 23
2009ஆம் ஆண்டு E டிவி என்ற தெலுங்கு சேனலில் நடைபெற்ற 'தி அல்டிமேட்டு டேன்சு' நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
22/ 23
நடிகை சாய் பல்லவிக்கு இன்ஸ்டாகிராமில் 5.4 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
23/ 23
நடிகை சாய் பல்லவி ( Image :Instagram @saipallavi.senthamarai)
123
ரசிகர்கள் மனங்களை கொள்ளை கொண்ட சாய் பல்லவி பிறந்தநாள்!