நடிகை ரம்யா பாண்டியன் 2016 ஆம் ஆண்டு வெளியான 'ஜோக்கர்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/ 15
பிறகு ஆண் தேவதை, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும், டம்மி டப்பாசு, போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனது நடிப்பால் இடம் பிடித்தார் ரம்யா பாண்டியன்.
3/ 15
இவர் நடித்த படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டாலும் இவருக்கு எதிர்பார்த்த படவாய்ப்புகள் அமையவில்லை என்றே கூறலாம்.
4/ 15
இதையடுத்து இவர் இடுப்பு தெரிய போஸ் கொடுத்து வெளியிட்ட மொட்டை மாடி போட்டோ ஷூட்டால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ரம்யா பாண்டியன்.
5/ 15
அதன் பிறகு ரம்யா பாண்டியன் போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தினார்.
6/ 15
அதையடுத்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ரம்யா பாண்டியன் தனது சமையல் திறமையாலும் ரசிகர்கள் மனதில் ஸ்டராங்காக இடம்பிடித்து விட்டார்.
7/ 15
குக் வித் கோமாளி புகழுடன் இவர் பண்ணும் காமெடியை ரசிக்கவென்றே சமூக வலைதளங்களில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
8/ 15
அதன் பிறகு விஜய் டிவியின் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் நடுவர்களின் ஒருவராக பங்குகொண்டார்.
9/ 15
ஆனால் நிகழ்ச்சி முழுமையாக முடியும்முன்னரே பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள சென்றுவிட்டார்.
10/ 15
மேலும் பிக்பாஸ் சீசன் 4-ல் இறுதி வரை சென்றார் ரம்யா பாண்டியன்.
11/ 15
சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கி 3-வது இடத்தை பிடித்தார் ரம்யா பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.
12/ 15
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 2.5 மில்லியன் பேர் பின்தொடருகிறார்கள்.
13/ 15
தற்போது நடிகை ரம்யா பாண்டியனும், ரியோவும் நடித்துள்ள 'தோட்டா' என்ற மியூசிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
14/ 15
தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
15/ 15
நடிகை ரம்யா பாண்டியன் ( Image :Instagram @actress_ramyapandian)