நடிகர் மற்றும் அரசியல் பிரமுகருமான சரத்குமார் தனது பிறந்தநாளை கடந்த ஜூலை 14 ஆம் தேதி கொண்டாடினர். சரத்குமாரின், அருமையான அன்பான மனைவி ராதிகா, தன் கணவரின் பிறந்த நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தார். இதற்காக, சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராதிகா மற்றும் சரத்குமார், இருவருமே, பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
மேலும், “அவருக்கு கொடுக்க மட்டும் தான் தெரியும். இந்த உறுதியான, இரும்பு போன்ற மனிதர் எங்கள் வாழ்வில் கிடைத்ததற்கு நாங்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்கிறோம். நான் எவ்வளவு மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று வார்த்தைகளால் கூற முடியவில்லை. உங்களுக்கு வாழ்வில் சிறந்தது மட்டுமே கிடைத்து, மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என் மனதின் ஆழத்திலிருந்து வாழ்த்துகிறேன். ஹேப்பி பர்த்டே லவ்!” என்று நெகிழ்ச்சியாக பதிவு செய்திருந்தார்.
ராதிகாவின் இந்த அழகான வாழ்த்துக்கு, சரத்குமார் நன்றி தெரிவித்து அற்புதமாக பதிவு செய்திருந்தார்.‘பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி. உன்னுடைய வாழ்த்தில், உனக்கு என் மேலிருக்கும் அன்பின் ஆழமும், காதலும், மரியாதையும், அழகாக வெளிப்பட்டது. பரஸ்பர ஆதரவாக, ஒருவர் மீது மற்றொருவர் பெரிய அபிமானம் வைத்திருக்கிறோம். கடினமாக காலங்களில் மகிழ்ச்சியை உணர, துணையாக இருந்ததற்கு நன்றி’