2008 ஆம் ஆண்டு வெளியான 'சேவல்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை பூனம் பஜ்வா. இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகர் பரத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதையடுத்து கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, தம்பிக்கோட்டை, அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார். நடிகை பூனம் பஜ்வா 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'மொடாட்டி சினிமா' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை பூனம் பஜ்வா கன்னட மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் பல படங்களில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்த பூனம் பஜ்வா மலையாள திரையுலகிலும் சில படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் 'ஆம்பள' திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி தந்தார். அதையடுத்து ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜூலியட் படத்திலும் நடித்திருந்தார். போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் ஜி.வி.பிரகாஷ் நடித்திருந்த 'குப்பத்து ராஜா' படத்தில் ஆன்ட்டி கேரக்டரில் நடித்தார். தற்போது உடல் எடையை குறைத்து ஃபிட்டாக இருக்கும் பூனம் பஜ்வா அடிக்கடி மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்தி வருகிறார். எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 2.8 மில்லியன் பேர் பின்தொடருகிறார்கள். அதேபோல் தற்போது அவர் பதிவிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. நடிகை பூனம் பஜ்வா ( Image : Instagram @poonambajwa555)