திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார் கீர்த்தி சுரேஷ்.
2/ 13
திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.
3/ 13
2000 ஆண்டில் பைலட்ஸ், 2001-ல் அச்சனே எனக்கு இஷ்டம், 2002-ல் குபேரன் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
4/ 13
2013 ஆண்டில் 'கீதாஞ்சலி' எனும் திரைப்படத்தின் மூலமாக மலையாளத் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
5/ 13
விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.
6/ 13
2016-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த' ரஜினி முருகன்' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் கீர்த்தி சுரேஷ்.
7/ 13
தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சண்டைக்கோழி 2 ஆகிய திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் கீர்த்தி.
8/ 13
தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
9/ 13
இவர் நடித்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமானது தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரிலும் வெளியானது.
10/ 13
பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பாத்திரத்தில் "மகாநடி" திரைப்படத்தில் நடித்தமைக்காக இவருக்கு 2018 ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
11/ 13
கீர்த்தி சுரேஷ் ரஜினியுடன் நடித்த 'அண்ணாத்த', மோகன்லாலுடன் 'மரக்காயர்' ஆகிய படங்கள் திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
12/ 13
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் கீர்த்தி தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் அடிக்கடி பகிர்வார்.
13/ 13
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 14 மில்லியன் பேர் பின்தொடருகிறார்கள்.