நடிகை ஜோதிகா நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ஜாக்பாட் படம் குறித்து ட்விட்டரில் பலரும் கலவையான விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர்.
2/ 12
குலேபகாவலி’ பட இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி இணைந்து நடித்துள்ள படம் ஜாக்பாட்.
3/ 12
ஹீரோயினுக்கு முக்கியத்துவமளிக்கும் கதைக்களத்தைக் கொண்ட காமெடிப் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரேவதி, ஜோதிகா இருவருமே போலீஸாக நடித்துள்ளனர்.
4/ 12
இவர்களுடன் யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூரலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
5/ 12
விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இன்று வெளியான இப்படம் குறித்து ட்விட்டரில் பலரும் கலவையான விமர்சனங்களை அளித்துள்ளனர்.