நடிகை ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 2003 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட 'ஷக்கலக்கா பூம் பூம்' என்றழைக்கப்பட்ட தொடரில் நடித்திருந்தார் ஹன்சிகா. 'தேஸ் மெய்ன் நிக்லா ஹோகா சானத்' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததற்காக ஸ்டார் பரிவார் விருதுகளில் விருப்பமான குழந்தை விருதை அவர் பெற்றார் ஹன்சிகா. ஹன்சிகா, 2007ஆம் ஆண்டு பூரி ஜெகனாத் இயக்கத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக 'தேசமுதுரு' என்ற படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்திற்காக அந்த ஆண்டின் சிறந்த அறிமுக நாயகிக்கான ஃபிலிம்பேர் விருதினை வாங்கினார் ஹன்சிகா. அதன் பிறகு தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்திருந்தார். நடிகை ஹன்சிகா 2011ஆம் ஆண்டு வெளியான 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். அதையடுத்து அவர் நடித்த ‘எங்கேயும் காதல்’ திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றதையடுத்து தமிழ் ரசிகர்கள் மனதில் தனி இடம் பித்துவிட்டார் ஹன்சிகா. அதன் பிறகு வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2 என தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ஹன்சிகாவின் தாய்மொழி சிந்தியாக இருந்த போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவார். தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் பிசியாக ஹன்சிகா நடித்து வருகிறார். தமிழில் சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘மஹா’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் 'My name is Shruthi' என்ற படத்திலும், தமிழில் ரவுடி பேபி என்ற படத்திலும் நடித்து வருகிறார். நடிகை ஹன்சிகாவிற்கு இன்ஸ்டாகிராமில் 5.2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் எடுத்த பிகினி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். நடிகை ஹன்சிகா (Image : Instagram @ihansika) நடிகை ஹன்சிகா (Image : Instagram @ihansika)