சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
2/ 5
பிரபுதேவாவை வைத்து குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண், தற்போது ஜோதிகா படத்தை இயக்க இருக்கிறார். சூர்யா தயாரிக்கும் இப்படத்தில் ஜோதிகாவுடன் ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
3/ 5
இந்தப் படத்தில் யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
4/ 5
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.
5/ 5
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்திருந்த காற்றின் மொழி படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.