‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நகைச்சுவையால் மக்களை கவர்ந்தவர் ரோபோ சங்கர். பின்னர் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். மாரி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் ரோபோ சங்கரின் காமெடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.