வடசென்னை படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் அசுரன். பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ், அப்பா, மகன் என்று இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.
2/ 25
இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர், பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென், பவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
3/ 25
எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
4/ 25
ஜி.வி.பிரகாஷ் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
5/ 25
பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து அசுரன் படத்தில் தனுஷ் - ஜி.வி கூட்டணி இணைந்துள்ளது.
6/ 25
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள அசுரன் படம் குறித்து ட்விட்டரில் பலரும் பாராட்டும் விதமாக விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர்.