பிக்பாஸ்4 இறுதிப் போட்டியில் ஆரி, பாலா, ரியோ, சோம் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றனர். இறுதியில் ஆரி முதல் இடத்தையும், பாலா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இதனை ஆரி ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே #AariArjunan என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.
2/ 7
பிக்பாஸ் டைட்டில் வின்னரான ஆரிக்கு 16 கோடி ஓட்டுக்களும், ரன்னர் அப்பான பாலாவுக்கு 6 கோடி ஓட்டுக்களும் வந்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்து வெற்றியாளரன ஆரிக்கு பரிசுத்தொகை 50 லட்சத்தை வழங்கினார்.
3/ 7
கடந்த 2017-ம் ஆண்டு முதல் விஜய் டிவி-யில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதன் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரியல்லா, ஆஜித், ரேகா, ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டனர்.
4/ 7
பின்னர் வைல்ட் கார்டு எண்ட்ரியில் அர்ச்சனாவும், சுசித்ராவும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்கள். இதில் சுசித்ரா வந்த வேகத்திலேயே அதாவது 21 நாட்களில் எவிக்ட் ஆனார்.
5/ 7
அதோடு ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி, அர்ச்சனா, அனிதா, ஆஜீத் ஆகியோர் குறைவான வாக்குகளைப் பெற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். கடந்த வாரம் ஷிவானி வெளியேற்றப்பட்டார். 5 லட்சம் பணத்தோடு சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறினார் கேப்ரியல்லா. பிக் பாஸ் வீட்டில் இறுதிப் போட்டியாளர்களாக ஆரி, பாலாஜி, சோம், ரியோ மற்றும் ரம்யா ஆகிய 5 பேர் இருந்தனர்.
6/ 7
நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில், மற்ற போட்டியாளர்களும் நேரடி பார்வையாளர்களாக பங்கேற்றனர். அரங்கத்தில் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் நலம் விசாரித்த கமல், பிக் பாஸ் அனுபவம் குறித்தும் வெளியில் சென்றதும் அவர்களுக்குக் கிடைத்த வரவேற்பு குறித்தும் கேட்டார். தந்தையை இழந்த அனிதா உணர்ச்சி வசப்பட்டபோது, நானும் உங்களுக்கு தந்தைதான் என ஆறுதல் கூறினார் கமல்.
7/ 7
பின்னர் ரம்யா , சோம், ரியோ என அடுத்தடுத்து வெளியாகினர். அதன் பின்னர் வெற்றியாளர்களை அறிவித்தார் கமல். அதில் டைட்டில் வின்னரான ஆரிக்கு 16 கோடி ஓட்டுக்களும், ரன்னர் அப்பான பாலாவுக்கு 6 கோடி ஓட்டுக்களும் வந்ததாக தெரிவித்து வெற்றியாளரன ஆரிக்கு பரிசுத்தொகை 50 லட்சத்தை வழங்கினார்.