96 படத்தின் 100-வது நாள் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 96 படம் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த சேரனை வரவேற்ற 96 பட இயக்குநர் பிரேம் குமார். 96 பட நூறாவது நாள் விழாவில் கலந்து கொண்ட தேவதர்ஷினி. இவர் அந்தப் படத்தில் சுபாஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 96 படத்தில் த்ரிஷாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த கௌரி, 96 பட நூறாவது நாள் விழாவில் கலந்து கொண்டார். 96 படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஆதித்யா பாஸ்கர். படத்தில் விஜய் சேதுபதியின் மாணவியாக பிரபா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த மலையாள நடிகை வர்ஷா பொல்லம்மா. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி படத்தின் இயக்குநருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் நூறாவது நாள் வெற்றிவிழா பதாகையின் முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டார். 96 படத்தின் வெற்றிக்கு காரணமானவர்களில் முக்கியமானவர் படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா.