இந்நிலையில், குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பு மார்ச் 29ம் தேதியன்று வெளியிடப்பட்டது. அதன்படி, 7,301 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.28ம் தேதி ஆகும். இதனிடையே, குரூப்-4 தேர்வுக்கு தற்போது வரை 13 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள் கவனத்திற்கு : நாளை (ஏப்ரல் 28) குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதல் பலர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. அதனால் சர்வர் முடங்கும் அபாயமும் உள்ளதால் நாளை வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பம் செய்வது உங்களுக்கான சிரமத்தை குறைக்கும். குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை டிஎன்பிஎஸ்சி இதுவரை நீட்டிக்கவில்லை. எனவே டிஎன்பிஎஸ்சி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ உடனே அப்ளை செய்து விடுங்கள்.