தமிழ்நாடு மீன்வளத்துறையில் 08.07.2021 அன்று வெளியிடப்பட்ட விளம்பர அறிவிப்பின்படி 1.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ஏ) (முன்னுரிமை பெற்றவர்) வயது வரம்பு (32), 2. பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர) (முன்னுரிமை பெற்றவர்) வயது வரம்பு (32), 3.பொதுப்போட்டி (முன்னுரிமை அற்றவர்) வயது வரம்பு (32), 4.ஆதிதிராவிடர் (முன்னுரிமை பெற்றவர்) வயது வரம்பு (35), 5.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் (முன்னுரிமை அற்றவர்) வயது வரம்பு (32) ஆகிய இன சுழற்சி முறையின்படி பதவியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி (இ.எஸ்.எல்.சி). மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.18 – 32 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப வேண்டும். ஒன்றுக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்யப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக மீன்வளத் துறை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி? விண்ணப்பதாரர்கள் Offline மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படியுங்கள். விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும். உங்கள் விண்ணப்ப படிவம் மற்றும் தொடர்புடைய அனைத்து சான்றிதழ்களுடன், புகைப்பட நகல்கள் இணைக்கவும் . எதிர்கால பயன்பாட்டிற்காக நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும். கீழ்கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும். முகவரி : மண்டல இயக்குனர், இந்திய மீன்வள ஆய்வு, மீன்பிடி துறைமுக வளாகம், ராயபுரம், சென்னை- 600013.