நம்மில் பெரும்பாலானோர் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில், தனியார் நிறுவனங்களில் பணி செய்து வருகிறோம். உதாரணமாக, 2011-12 தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் படி (National Sample Survey), நாட்டின் மொத்த பணியாளர்களால் கிட்டத்தட்ட 83% பேர் முறைப்படுத்தப்படாத பணியாளர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார நெருக்கடியில் மிகவும் பாதிக்கப்பட கூடியவராகவும், எந்தவித வேலை உத்தரவாத பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பும் இல்லாதவர்களாகவும் உள்ளனர்.
இத்தைகய தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, தொழில் நிறுவனங்கள் (பணியாளர்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்கல்) சட்டத்தை தமிழ்நாடு அரசு கடந்த 1981ம் ஆண்டில் நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் கீழ், பணியாளர்கள் இரண்டு வருடங்களில், தொடர்ந்து 480 நாட்கள் பணி செய்தால் நிரந்தர பணி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.
Employment Benefits: தொழிலாளருக்கு சமூகப் பாதுகாப்பு கிடைக்கும் வகையில் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. நிரந்தர அந்தஸ்து பெற்றால், பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் சமூகப் பாதுகாப்பை பெறலாம். மகப்பேறு விடுமுறை, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி, சம்பளத்துடன் கூடிய விடுப்பு, வேலை இழப்பீடு, பணிக்கொடை உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் பெற முடியும். தொழிலாளர்கள் நீங்கள் தனியார் நிறுவனங்களில் பணி செய்து வந்தால் சமூகப் பாதுகாப்பு அளிக்கும் முக்கியமான சட்டமாக, பணிக்கொடை வழங்கல் சட்டம், 1972 உள்ளது