National Career Service Portal என்பது Naukri, Monster, Linkedin போன்ற டிஜிட்டல் தளமாகும்.வேலை தேடுவோர்களையும் மற்றும் வேலை வழங்குபவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த தளம் கடந்த 2014ம் ஆண்டு துவங்கப்பட்டது. 2023 பிப்ரவரி 4ம் தேதியின் படி, இந்த தளத்தில் வேலை அளிக்க கூடியவர்கள் எண்ணிக்கை மட்டும் 812,368 ஆக உள்ளன. இவர்கள், தங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள கிட்டத்தட்ட 324,737 காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை பதிவு செய்திருக்கின்றனர்.
டிஜிட்டல் திறன்கள் மூலம் கிராமப்புற இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் பொருட்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மத்திய வேலைவாய்ப்பு அமைச்சகம் இணைந்து DIgisaksham எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தில் பதிவு செய்துள்ள அனைத்து இளைஞர்களும் இந்த திறன் படிப்பில் எந்தவித கட்டணமின்றி சேர்ந்து கொள்ளலாம். Excel, Python, Azure, Java, Security Fundamentals ஆகிய பாடநெறிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.