வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்களை மேலாளர்கள் எப்படி தேர்வு செய்கின்றனர், எப்படி வடிகட்டுகின்றனர், எப்படி நிராகரிக்கின்றனர் என்பதில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. தற்போது இந்திய நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த டெவலப்பர்கள் ஏதேனும் ஒரு புது விஷயத்தை கண்டறிய வேண்டும் என்பது பொதுவான நியதியாக மாறியிருக்கிறது.
அலுவலகத்திற்கு அருகாமையில் வீடு இருக்க வேண்டும் என்பதை பிரச்சனைக்கு உரிய விஷயமாக கருதாமல், வேறெந்த பிரச்சனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் நன்றாக பணி செய்யுமாறு ஊழியர்களுக்கு ஊக்கம் அளிக்க முடிகிறது. இண்டர்வியூ என்பது நேரடியாக நடைபெற்ற காலம் போய் தற்போது வீடியோ கால் மூலமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. உலகம் தற்போது பெருவாரியாக ஏற்றுக் கொள்ள தொடங்கியுள்ள நிலையில், பல பணியிடங்கள் என்பது எங்கிருந்து வேண்டுமானாலும் பணி செய்யலாம் என்ற நிலைக்கு மாறியுள்ளன.
தற்போது பணியாளர்களை நிறுவனங்கள் எப்படி மதிப்பீடு செய்கின்றன என்ற முக்கியமான கேள்விக்கு விடை காண வேண்டியுள்ளது. புதிய பணியாளர்களை தேர்வு செய்யும் நிறுவனங்கள் எப்போதுமே உங்கள் சுயவிவர ஆவணத்தில் ஏதேனும் ஒரு புதுமையான விஷயத்தை எதிர்பார்க்கின்றன. குறிப்பாக, ஏற்கனவே என்னென்ன துறைகளில் நீங்கள் பணி செய்துள்ளீர்கள், அதற்கு நீங்கள் வழங்கிய பங்களிப்பு என்ன என்பதை நிறுவனங்கள் ஆராய்கின்றன. ஆகவே, பெரு நிறுவனங்களுக்கு விண்ணப்பம் செய்கையில் உங்களின் முந்தைய புராஜக்டுகள் குறித்து குறிப்பிட மறக்காதீர்கள்.
வெற்றியடைந்த விஷயத்தை முன்னெடுத்துச் செல்வது : தங்கள் நிறுவனத்திற்காக தேர்வு செய்யப்படும் ஊழியர்கள், மார்க்கெட்டில் ஏற்கனவே வெற்றியடைந்த ஒரு யோசனையை முன்னெடுத்துச் செல்லும் திறன் கொண்டவராக இருக்கிறாரா என்பதை நிறுவனங்கள் ஆய்வு செய்கின்றன. உதாரணத்திற்கு ஸ்விக்கி, மந்த்ரா, ஊபர் போன்ற நிறுவனங்களை எடுத்துக் கொள்ளுங்கள். தங்களுடைய ப்ராஜெக்ட்களை ஊக்கப்படுத்தும் திறன் புதிதாக வரும் பணியாளர்களுக்கு இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்படுகிறது.
புள்ளிவிவர ஆய்வு : பணியாளர்கள் நியமனத்தில் நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் மாற்றங்கள் தொடர்பான ஆய்வுக்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இவற்றில் 87 சதவீத நிறுவனங்கள் இண்டர்நெட் மூலமாக இயங்கும் நிறுவனங்கள் ஆகும். இவற்றில் மேலாளர்கள், பொறியியல் மேலாளர்கள், டெவலப்பர்கள், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இண்டர்வியூவில் பங்கேற்பதற்கு முன்பாகவே சுயவிவர ஆவணத்தின் மூலமாக பெரும்பாலான தகவல்களை நிறுவனங்கள் ஆய்வு செய்கின்றன. குறிப்பாக, தங்களைப் போன்ற நிறுவனத்தில் ஏற்கனவே பணி செய்துள்ளாரா, தங்கள் தொழில்நுட்பத்தையும், வணிகத்தையும் முன்னெடுத்துச் செல்வாரா என்பதை நிறுவனங்கள் ஆய்வு செய்கின்றன. 37 சதவீத நிறுவனங்கள் மட்டுமே பணியாளர்களின் பொழுதுபோக்கு குணாதிசயங்கள் என்னவென்று பார்க்கின்றன.