முகப்பு » புகைப்பட செய்தி » வேலைவாய்ப்பு » ரூ.1.25 லட்சம் வரை சம்பளம்... ஊராட்சித் துறையில் 97 காலிப்பணியிடங்கள்

ரூ.1.25 லட்சம் வரை சம்பளம்... ஊராட்சித் துறையில் 97 காலிப்பணியிடங்கள்

Recruitment for vaazhndhu kaattuvom project : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் பணிபுரிய 97 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • 17

    ரூ.1.25 லட்சம் வரை சம்பளம்... ஊராட்சித் துறையில் 97 காலிப்பணியிடங்கள்

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பணிபுரிய 97 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பிப்ரவரி 16 ஆம் நாள் முதல் தொடங்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 27

    ரூ.1.25 லட்சம் வரை சம்பளம்... ஊராட்சித் துறையில் 97 காலிப்பணியிடங்கள்

    பல்வேறு பிரிவுகளில் 97 காலிப்பணியிடங்கள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. இப்பணியிடங்களுக்குச் சம்பளமாக ரூ.25,000 முதல் தொடங்கி ரூ.1,25,000 வரை வழங்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 37

    ரூ.1.25 லட்சம் வரை சம்பளம்... ஊராட்சித் துறையில் 97 காலிப்பணியிடங்கள்

    காலிப்பணியிடங்கள் விவரங்கள்: திட்ட நிர்வாகி (தொழில் மேம்பாடு) - 13, திட்ட நிர்வாக (கணக்கு) - 18, திட்ட நிர்வாகி (திறன் மற்றும் வேலைகள்) -25, இளம் தொழில் வல்லுநர்கள் - 30, மாவட்ட நிர்வாக அதிகாரி - 2, திட்ட நிர்வாக (அக்கவுண்ட்ஸ் மற்றும் அட்மின்) - 1, திட்ட நிர்வாகி ( தொழில் நிறுவனங்களுக்கான நிதி விநியோகம்) - 1, செயல் அதிகாரி - 1 மற்றும் வட்டார குழு தலைவர் - 6.

    MORE
    GALLERIES

  • 47

    ரூ.1.25 லட்சம் வரை சம்பளம்... ஊராட்சித் துறையில் 97 காலிப்பணியிடங்கள்

    வயது வரம்பு : திட்ட நிர்வாகி (தொழில் மேம்பாடு), திட்ட நிர்வாக (கணக்கு) மற்றும் திட்ட நிர்வாகி (திறன் மற்றும் வேலைகள்) பதவிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 40 ஆக உள்ளது. இளம் தொழில் வல்லுநர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க 28 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாக அதிகாரி பதவிக்கு அதிகபட்ச  45 வயதாகவும், இதர பதவிகளுக்கு அதிகபட்ச வயது 53 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 57

    ரூ.1.25 லட்சம் வரை சம்பளம்... ஊராட்சித் துறையில் 97 காலிப்பணியிடங்கள்

    கல்வித்தகுதி: அந்தந்த பதவிகளுக்கு ஏற்ற பாடப்பிரிவில் முதுகலை அல்லது இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 4 முதல் 8 ஆண்டுகள் அனுபவம் தேவை. இளம் தொழில் வல்லுநர்கள் பதவிகளுக்கு Business Administration, rural management, business management, entrepreneurship development, social work, agriculture, automation, engineering, marketing, finance, HR என்ற பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 67

    ரூ.1.25 லட்சம் வரை சம்பளம்... ஊராட்சித் துறையில் 97 காலிப்பணியிடங்கள்

    சம்பளம் விவரம் : திட்ட நிர்வாகி (தொழில் மேம்பாடு), திட்ட நிர்வாக (கணக்கு) மற்றும் திட்ட நிர்வாகி (திறன் மற்றும் வேலைகள்) ஆகிய பதவிகளுக்கு மாதம் ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும். இளம் தொழில் வல்லுநர்கள் பதவிக்கு ரூ.45,000 மாத சம்பளமாக வழங்கப்படும். மாவட்ட நிர்வாக அதிகாரி பதவிகளுக்கு ரூ.75,000 - 1,25,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதர பதவிகளுக்கு ரூ.35,000 சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 77

    ரூ.1.25 லட்சம் வரை சம்பளம்... ஊராட்சித் துறையில் 97 காலிப்பணியிடங்கள்

    விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://tnjobs.tnmhr.com/Landing.aspx என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு மார்ச் 2 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES