Group 4 Exam Cut-off prediction: பொது பிரிவினர் 175 (கூடவோ/குறையவோ செய்யலாம்) , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறைந்தபட்சம் 170 (கூடவோ/குறையவோ செய்யலாம்) , மிகவும் பிற்படுத்தப்பட வகுப்பினர் 168(கூடவோ/குறையவோ செய்யலாம்) , பட்டியலின வகுப்பினர் 160(கூடவோ/குறையவோ செய்யலாம்) , பழங்குடியினர் 155 (கூடவோ/குறையவோ செய்யலாம்) கேள்விகளுக்கு மேல் சரியான பதில் அளித்திருந்தால் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்
TNPSC group 4 Results: கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிக்கையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் , கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, இந்த புதிய முறையைப் பின்பற்றி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிட இருக்கிறது.
TNPSC Group 4 Exam Latest updates: டிசம்பர் மாதத்திற்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாக முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்து தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.