முகப்பு » புகைப்பட செய்தி » வேலைவாய்ப்பு » தமிழ்நாடு அஞ்சல்துறையில் 3,167 காலியிடங்கள்: சம்பளம் என்ன? உங்களுக்கு செட் ஆகுமா?

தமிழ்நாடு அஞ்சல்துறையில் 3,167 காலியிடங்கள்: சம்பளம் என்ன? உங்களுக்கு செட் ஆகுமா?

இப்பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 16 ஆகும்.

  • 16

    தமிழ்நாடு அஞ்சல்துறையில் 3,167 காலியிடங்கள்: சம்பளம் என்ன? உங்களுக்கு செட் ஆகுமா?

    இந்திய அஞ்சல் துறை நாடு முழுவதும் காலியாக உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் (Branch Post Master), துணை கிளை போஸ்ட் மாஸ்டர் (Assistant Branch Post Master), அஞ்சல் உதவியாளர் (Gramin Dak Sevaks (GDS) காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டிடல் 3,167 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    MORE
    GALLERIES

  • 26

    தமிழ்நாடு அஞ்சல்துறையில் 3,167 காலியிடங்கள்: சம்பளம் என்ன? உங்களுக்கு செட் ஆகுமா?

    ஊதியம் மற்றும் படிகள்: கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM - BranchPostmaster BPM) பதவிக்கு - ரூ. 12,000 முதல் 29,380 வரை ஊதியம் வழங்கப்படும். உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் / அஞ்சல் பணியாளர் (Assistant Branch Postmaster - ABPM /Dak Sevak) - ரூ. 10,000 முதல் 24,470/- வரை ஊதியம் வழங்கப்படும்

    MORE
    GALLERIES

  • 36

    தமிழ்நாடு அஞ்சல்துறையில் 3,167 காலியிடங்கள்: சம்பளம் என்ன? உங்களுக்கு செட் ஆகுமா?

    இந்த காலிப்பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (Merti List) தயாரிக்கப்படும்.10ம் வகுப்புத் தேர்வில், இரண்டிற்கும் மேற்பட்ட தேர்வர்கள் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    தமிழ்நாடு அஞ்சல்துறையில் 3,167 காலியிடங்கள்: சம்பளம் என்ன? உங்களுக்கு செட் ஆகுமா?

    அஞ்சல்துறை துறை சாராத சேவை அமைப்பின் (Extra Departmental system in the Department of Posts) கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை, படிகள் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும், அஞ்சல் துறையில் முழு நேர ஊழியர்களுக்கான சம்பள விகிதம் இவர்களுக்கு பொருந்தாது. (Gramin Dak Sevaks are holders of civil posts but they are outside the regular civil service)

    MORE
    GALLERIES

  • 56

    தமிழ்நாடு அஞ்சல்துறையில் 3,167 காலியிடங்கள்: சம்பளம் என்ன? உங்களுக்கு செட் ஆகுமா?

    ப்ரோமோஷன் உண்டா? ஆம்! குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட இந்த கிராம அஞ்சல் உதவியாளர்கள் துறைத் தேர்வின் மூலம் இந்திய அஞ்சல் துறையில் உள்ள நிர்வாகப் பிரிவின் கீழ் (Post of Administrative Offices (Circle Office and Regional Office) வரும் குரூப் 'சி' பணிக்கு (பல்நோக்கு பணியாளர் - Multi Tasking Staff) தகுதி பெறலாம். அதேபோன்று, 5 ஆண்டு பணி முன் அனுபவம் உடைய, கிராம அஞ்சல் உதவியாளர்கள் எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமல், இந்திய அஞ்சல் துறை சார்நிலைப் பணிகளில் (Posts of Subordinate Office) அடங்கிய குரூப் சி (பல்நோக்கு பணியாளர் - Multi Tasking Staff) நிலைக்கு தகுதியுடைவராவார். குறைந்தது 3 ஆண்டு பணி முன்அனுபவம் உள்ள அஞ்சல் உதவியாளர்கள் துறைத் தேர்வின் மூலம் கூட இந்த பதவியை அடையலாம். அதன்பின், போஸ்ட்மேன், மெயில்கார்டு உள்ளிட்ட பதவிகளுக்கு உயர்வு பெற வாய்ப்புண்டு.

    MORE
    GALLERIES

  • 66

    தமிழ்நாடு அஞ்சல்துறையில் 3,167 காலியிடங்கள்: சம்பளம் என்ன? உங்களுக்கு செட் ஆகுமா?

    விண்ணப்பம் செய்வது எப்படி? இப்பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
    முகப்புப் பக்கத்தில், Registration- ஐ கிளிக் செய்து, விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண், இதர தொடர்பான விவரங்கள் மற்றும் தகவல்களை அளிக்க வேண்டும். இறுதியாக, விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 செலுத்த வேண்டும்.
    பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும், விவரங்களுக்கு கிளிக் செய்யவும்.

    MORE
    GALLERIES