மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு கொண்டு வந்துள்ள 'உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை' (Production Linked Incentives) வெற்றியை அளித்து வருகிறது. இதன் நோக்கம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்வது தான்.
அந்தவகையில், டெல், ஹெச்பி போன்ற உலகளாவிய நிறுவனங்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட PLI திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன் ஐடி ஹார்டுவேர் துறைக்கு ரூ.17,000 கோடி மதிப்பிலான உற்பத்தி இணைப்புச் சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அதன் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்ல, பிரபல தொலைபேசி நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சங் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது.
இது தற்போது மடிக்கணினிகள் மற்றும் பிற மேம்பட்ட கணினிகள் போன்ற சாதனங்களின் உற்பத்தியில் ஸ்மார்ட்போன் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் வெற்றியை பிரதிபலிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. PLI திட்டத்தின் புதிய பதிப்பு, நாட்டில் மொத்த மின்னணுவியல் உற்பத்தியை ஆண்டுதோறும் $300 பில்லியன்களாக உயர்த்தும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.