பெரும்பாலும், சுய உதவிக் குழுக்கள் என்றாலே பெண்களின் அமைப்பு என்றளவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. நாட்டில் மொத்த 1.2 கோடி சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகிறது. இதில், கிட்டத்தட்ட 12% குழுக்கள் ஆண்களால் நடத்தப்பட்டு வருகிறது.இருப்பினும் , இத்திட்டம் தொடர்பான போதிய விழிப்புணர்வு பலரிடத்திலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்களை, அடுத்த கட்டமாக பெரிய உற்பத்தியாளர் கூட்டமைப்பாக வலுப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. ஒவ்வொரு கூட்டமைப்பும் பல ஆயிரம் உற்பத்தியாளர்களை கொண்டதாக இருக்கும். இந்த கூட்டமைப்புகள், பொருளாதாரங்களுக்கு தேவையான மூலப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு ஆதரவு வழங்கப்படும் என்றும் அறிவித்துளளது. எனவே, உங்கள் பகுதியில் உள்ள ஒத்த கருத்துடைய ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சுய உதவி குழுவை அமைத்துக் கொள்ளுங்கள்.