முகப்பு » புகைப்பட செய்தி » வேலைவாய்ப்பு » 8ம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.17 லட்சம் வரை அரசு மானியம்.... ஈசியாக தொழில் தொடங்கலாம்

8ம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.17 லட்சம் வரை அரசு மானியம்.... ஈசியாக தொழில் தொடங்கலாம்

பயன் பெற விழைவோர் விண்ணப்பிக்க kviconline.gov.in/pmegpeportal/ என்ற காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

 • 17

  8ம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.17 லட்சம் வரை அரசு மானியம்.... ஈசியாக தொழில் தொடங்கலாம்

  2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP), வேளாண் அல்லாத துறைகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் அளிக்கிறது. 2017ல் இருந்து தற்போது வரை, தமிழ்நாட்டில் உள்ள 28,789 நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.

  MORE
  GALLERIES

 • 27

  8ம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.17 லட்சம் வரை அரசு மானியம்.... ஈசியாக தொழில் தொடங்கலாம்

  உற்பத்தி சார்ந்த தொழில்கள் துவங்க ரூ.50 லட்சம் வரையும், சேவை சார்ந்த தொழில்கள் துவங்க ரூ.20 லட்சம் வரையும் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற எந்தவித கல்வித் தகுதியும் தேவை இல்லை. குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை.  இருப்பினும், ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட திட்ட மதிப்புடைய உற்பத்தித் திட்டங்கள் மற்றும் ரூ.5 இலட்சத்துக்கு மேற்பட்ட திட்ட மதிப்புடைய சேவைத் திட்டங்கள் முன்னெடுப்போர் குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 37

  8ம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.17 லட்சம் வரை அரசு மானியம்.... ஈசியாக தொழில் தொடங்கலாம்

  மானியம்: ஓபிசி/எஸ்சி/எஸ்டி/ மாற்றுத் திறனாளிகள்/சிறுபான்மையினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு ஒட்டுமொத்த திட்டத் தொகையில் 25% (நகர்ப்புறங்களுக்கு), 35% (கிராம புறங்களுக்கு) மானியமாக வழங்கப்படும். அதவாது, 50 லட்சம் திட்டம் மதிப்பீட்டில், கிட்டத்தட்ட 17.5 லட்சம் ரூபாயை மானியமாக அரசு செலுத்தும், இதர தொகையை வங்கியிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 47

  8ம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.17 லட்சம் வரை அரசு மானியம்.... ஈசியாக தொழில் தொடங்கலாம்

  தொழில் முனைவோர் தங்கள் பங்களிப்பு நிதியாக வெறும் 5% நிதி அளித்தால் போதும். பொதுப் பிரிவினருக்கு இது 10% ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியின் வழிமுறையின் படி, ரூ.10 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு அடமானம் தேவையில்லை.

  MORE
  GALLERIES

 • 57

  8ம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.17 லட்சம் வரை அரசு மானியம்.... ஈசியாக தொழில் தொடங்கலாம்

  ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், பயனாளிகளில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் தொழில் முனையும் பட்டியல்/பழங்குடியின மற்றும் பெண்களாக உள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 67

  8ம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.17 லட்சம் வரை அரசு மானியம்.... ஈசியாக தொழில் தொடங்கலாம்

  பயன் பெற விழைவோர் விண்ணப்பிக்க என்ற காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை,ஆணையம்  நேரடியாக பரிசீலனை செய்து, அவற்றை கடன் வழங்கும் முடிவுகள் எடுப்பதற்காக, நேரடியாக வங்கிகளுக்கு அனுப்பும்.

  MORE
  GALLERIES

 • 77

  8ம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.17 லட்சம் வரை அரசு மானியம்.... ஈசியாக தொழில் தொடங்கலாம்

  இணையதளத்தில் மானியம் கோருவதற்கு முன்பாக, விண்ணப்பதாரர்கள் தொழில் முனைவோர் மேம்பாடு நடத்தும் (Entrepreneurship Development Institute) 5 நாள் தொழில் முனைவோர் முகாமில் கலந்து கொள்ள வேண்டும். இந்த பயிற்சியை முடித்தவர்களுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும். பயிற்சி தொடர்பான விவரங்களை காணலாம்.

  MORE
  GALLERIES