சுயமான தொழில் தொடங்க இருக்கும் பெண்கள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வெறும் 5% வட்டியில் ரூ 2 லட்சம் வரை கடன் உதவி பெறலாம். இந்த வட்டி விகிதம் ஏனைய இதர திட்டங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும். கடன் தொகையை, 3 முதல் 8 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்த அவகாசம் அளிக்கப்படுகிறது.