முகப்பு » புகைப்பட செய்தி » வேலைவாய்ப்பு » ரயில்வே துறையில் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் - மத்திய அமைச்சர் தகவல்!

ரயில்வே துறையில் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் - மத்திய அமைச்சர் தகவல்!

Indian Railway Recruitment : இந்தியன் ரயில்வேயில் நிரப்பப்படாமல் இருக்கும் காலிப்பணியிடங்கள் குறித்து ராஜ சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு சுமார் 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பிடாமல் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

  • 15

    ரயில்வே துறையில் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் - மத்திய அமைச்சர் தகவல்!

    இந்தியன் ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து எம்.பி. பிரமோத் திவாரியால் ரயில்வே அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 25

    ரயில்வே துறையில் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் - மத்திய அமைச்சர் தகவல்!

    அதில் ரயில்வேயில் மொத்தம் 2,98,973 காலிப்பணியிடங்களை நிரப்பப்படாமல் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மொத்தம் 17 ஜோன் பிரிவு வாரியாக உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    ரயில்வே துறையில் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் - மத்திய அமைச்சர் தகவல்!

    அதிகபட்சமாக வடக்கு பகுதி ரயில்வேயில் 38,967 காலிப்பணியிடங்களும், குறைந்தபட்சமாகத் தென் மேற்கு ரயில்வேயில் 6,581 காலிப்பணியிடங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    ரயில்வே துறையில் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் - மத்திய அமைச்சர் தகவல்!

    தொடர்ந்து, மெட்ரோ ரயில் பிரிவில் 1,069 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதில் 1,39,050 காலிப்பணியிடங்கள் குரூப் சி தேர்வுகள் மூலம் நிரப்ப பணித்தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    ரயில்வே துறையில் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் - மத்திய அமைச்சர் தகவல்!

    மேலும் உள்ள இதர காலிப்பணியிடங்கள் ரயில்வே தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட காலிப்பணியிடங்கள் ரயில்வேயில் அனைத்து பிரிவுகளுக்குச் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் விரைவில் இப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

    MORE
    GALLERIES