இந்தியாவின் முக்கிய அரசுப் பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு அறிவிப்பில் 1105 காலிப்பணியிடங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் தேர்வர்கள் விண்ணப்பிக்கப் பிப்ரவரி 21 ஆம் நாள் வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வு 2023 மே மாதம் 28 ஆம் நாள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SC /ST பிரிவு தேர்வர்கள் இத்தேர்வை மீண்டும் எழுதக் கட்டுப்பாடுகள் இல்லை. OBC 9 முறை மற்றும் PwBD/பொதுப் பிரிவினர் 9 முறை எழுதலாம். மாற்றுத் திறனாளிகளுக்கான உள்ள சலுகைகளுக்கு அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. இந்தியக் குடிமைப் பணி தேர்வுகளுக்கு https://upsconline.nic.in/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.100 ஆன்லைனில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.